நேசம் - 06

2 0 0
                                    

🎭 பிழைத்த உதிர கீறல்கள் பிழையா நேசத்தில்...🎭

நேசம் - 06









நான் சென்ற போது அந்த ஆபீஸ் பூட்டி கிடந்தது. ஆனால் வெளியில் இருந்த பெஞ்சில் என சகோதரன் நவீன் பாவமாக அமர்ந்திருந்தான்.

அவனைக் கண்டதும் எனக்குள் இருந்த குறும்பு விளித்துக் கொண்டது.ஆனாலும் அதை கட்டுப்படுத்திக் கொண்டே அவன் அருகில் சென்று

" நவீ " என மெதுவாக அழைத்தேன்.

அவன் என்னை ஒரு ஆச்சரியத்தோடு நிமிர்ந்து பார்த்து

"ரித்து அக்கா🙄 நீங்க எங்க என்ன பண்றீங்க🤔"

அவன் திடீரென இவ்வாறு கேட்பான் என எதிர்பார்க்காத நான் தடுமாறிக்கொண்டே சமாளிக்கும் விதமாக

"அ... து அது வந்து. வீட்ல யாரும் இல்லையா ரொம்ப போர் அடிச்சது அதான் உன்ன பாத்துட்டு போலாமேன்னு வந்தன் "

"இது நம்புற மாதிரி இல்லையே🤔
நீ ஒன்னா நம்பர் பயந்தாங் கோழி.  நீ தனியா இவ்வளவு தூரம் டிராவல் பண்ணி இங்க வந்த. அதுவும் என்னை பார்க்க. நான் இத நம்பணும்.

எவனாச்சும் புயல் மழைல உக்காந்து பொரி உருண்டை சாப்பிடுவான் அவன் கிட்ட போய் சொல்லு"

"அப்ப நான் சரியான ஆளு கிட்ட தான் சொல்லிருக்கன் 🤭🤭"

"😬😬😬"

"சரி நான் கோபப்படாத... ஆமா நீ என்ன வெளியில் வந்து உட்கார்ந்திருக்கிற. துரத்தி விட்டாரா உன் சீனியர் உன்னோட தொல்ல தாங்க முடியாம"

"ரித்துக்கா நானும்  கொஞ்ச நாளா பார்க்கிறன்  உனக்கு வாய் ரொம்ப கூடிடுச்சு"

" அப்படி ஒன்னும் தெரியலையே என் வாய் 2 1/2 inch ல தான் இருக்குது"

"தயவுசெய்து மொக்க போடாத நீ எதுக்கு இங்க வந்தன்னு சொல்லு முதல். எனக்கு நிறைய வேலை இருக்குது.

என் சீனியர வேற காணம் எங்கே போய்ட்டார்ன்னு தெரியல்ல. இல்லன்னா டைமுக்கு டான்னு வந்துடுற மனுஷன். "

🎭 பிழைத்த உதிர கீறல்கள் பிழையா நேசத்தில்... 🎭    Where stories live. Discover now