நேசம் - 16

2 0 0
                                    

🎭 *பிழைத்த உதிர கீறல்கள் பிழையா நேசத்தில்...* 🎭

*நேசம் - 16*





கமிஷனர் ஆபீஸில் குளிரூட்டப்பட்ட அறையில் குறுக்கும் மறுக்கும் ஆக நடந்து கொண்டிருந்தேன்.

என்னை முறைத்து பார்த்தபடி கமிஷனரும் தலையில் கை வைத்த படி நவீனும் ஆளுக்கு ஒரு பக்கம் அமர்ந்திருந்தனர்.

இந்த அமைதி பொறுக்க முடியாத கமிஷனர்

" போதும் நடந்தது வந்து உட்கார்"

நடப்பதை நிறுத்திய நான் அலட்சியமாக வந்து கதிரையில் அமர்ந்தேன்.

என்னை நெருங்கி வந்த கமிஷனர் என் எதிரில் இருந்த கதிரையில் அமர்ந்து என் கண்களையே ஆழமாக பார்த்தான்.

மேசையில் கோபமாக ஒரு தட்டு தட்டுகிறேன். திடுக்கிட்ட அவன்

" இப்ப எதுக்கு சும்மா சும்மா மேசைல தட்டிட்டு இருக்கிற என்னதான் உன் பிரச்சனை"

"நீங்க எல்லாருமே தான் பிரச்சனை... முக்கியமா நீ" அழுத்தமான குரலில் விரல் நீட்டி கூறினேன்.

புருவம் முடிச்சுடன் ஏன் என்பது போல் என்னை பார்த்தான்

அவனிடம் பேசும் அளவு பொறுமை எனக்கில்லை ஆனால் பேசித்தான் ஆக வேண்டும்.

"அந்தப் பொண்ண கொன்னது நீ... " ஒரே போடாக பழியை அவன் மீது போட்டேன்.

அதிர்ந்த அதன் வியர்த்த முகத்தை துடைத்துக் கொண்டு என்னை கலவரமாக பார்த்தான்.

"அந்தப் பொண்ண கொன்னது நீ தான்... நான் பார்த்தன்"

" இல்ல.. நான்..... நீ பொய் சொல்ற. நீ பொய் சொல்ற... நான் இல்ல அது "
அவன் திணறிக் கொண்டிருக்க

நவீன் சந்தேகமாக என்னையும் அவனையும் பார்த்தான்.

" காலையில உன்ன கொல்ல வந்தது மட்டும் தான் நான் அந்த பொண்ண நான் எதுவுமே பண்ணல" அவன் அழுத்தமாக கூறினான்.

"சரி அப்போ என்னை ஏன் கொல்ல வந்த... ஒரு காலத்துல எனக்கு நண்பனா இருந்த அப்புறமா என்னோட ரகசியங்களை வெளியில சொன்ன இப்போ என்ன கொலை பண்ண கூட துணிஞ்சு நீயே நேர்ல வந்துட்ட"

🎭 பிழைத்த உதிர கீறல்கள் பிழையா நேசத்தில்... 🎭    Where stories live. Discover now