🎭 *பிழைத்த உதிர கீறல்கள் பிழையா நேசத்தில்...* 🎭
*நேசம் - 11*
பரந்து விரிந்த பிரபஞ்ச வெளியில் சிறு அங்கிகளாய் தோன்றிய மானுட பிறவிகள் தங்களை மீறிய சக்தி எதுவும் இல்லை என எண்ணிக்கொண்டு பெருமை பீத்திக் கொண்டு திரிய அந்த இயற்கையோ சத்தம் இன்றி பரிகாசிக்கின்றது.
மெல்லிய குளிர் காற்று காயம் பட்ட மேனியை தீண்டிச் சென்றிட
என்னவள் இறுகிய அணைப்பில் இரயில் வண்டியாய் தடதடக்கும் அவள் இதயத்துடிப்பு நல்லிசையாய் செவி அடைத்திட அவள் மார்ச் சூட்டில் உருகும் பனியாய் நானும் இயற்கை வரைந்து வைத்த ஓவியமாக நின்றிருந்தோம்.
அழுத என் விழிகளை மெதுவாக துடைத்து விட்டவள் அவள் உயரத்திற்கு என்னை குனிய வைத்து என் நெற்றி முட்டி வார்த்தைகளே இன்றி என் மீதான காதலை ஒரு பார்வையிலேயே உணர்த்தி விட்டாள்.
அவள் முன் மண்டியிட்டு அமர்கிறேன்.
என் விரலில் இருந்த ஒரு மோதிரத்தை அவள் முன்னே நீட்டி
" வில் யு மேரி மீ"
என்றது தான் தாமதம் எதுவும் யோசிக்காமல் அவள் கரங்களை என் முன் என்னை நீட்டுகிறாள்.கண்களில் கண்ணீருடன் அவள் விரல்களைப் பிடித்து மோதிரத்தை அணிவித்து முத்தமிடுகிறேன்.
அவள் கண்களிலும் கண்ணீர் தழும்பி நிற்கிறது.
" ரித்து... இந்த பிரபஞ்சத்தோட சாட்சியா சொல்லுறன். உன்ன என் உடம்புல கடைசி மூச்சு இருக்கிற வரைக்கும் பத்திரமா பாத்துப்பன்.
எங்கேயும் யாருக்காகவும் எதுக்காகவும் உன்னை விட்டுக் கொடுக்க மாட்டன். இந்த உலகமே எதிர்த்தாலும் நீ மட்டும் தான் எனக்கு. என் முதலும் நீ. என் முடிவும் நீ.
இன்னைக்கு நான் புடிச்ச இந்த கையை எந்த சந்தர்ப்பத்திலயும் விட மாட்டன்.உன்னோட சிரிப்பு சந்தோஷம் சோகம் கவலை கோபம் கண்ணீர் எல்லாமே எனக்குத்தான் சொந்தம். உன்னை எதுக்காகவும் ஏங்க விடமாட்டன்.
![](https://img.wattpad.com/cover/368915199-288-k995356.jpg)
YOU ARE READING
🎭 பிழைத்த உதிர கீறல்கள் பிழையா நேசத்தில்... 🎭
RomanceDisclaimer: ஒரு ஜாலியான லவ் ஸ்டோரி ரொம்ப பெருசாலாம் எதிர்பாக்காதீங்க 🤗 வழக்கம் போலதான் கொஞ்சமா த்ரில்லர், க்ரைம், ஃபேண்டஸி, கருத்தூசி எல்லாம் மிக்ஸ் பண்ண டெம்லேட்... 🤩 பிடிக்காதவங்க ஸ்கிப் பண்ணிடுங்க.