நேசம் - 28

2 0 0
                                    

🎭 பிழைத்த உதிர கீறல்கள் பிழையா நேசத்தில்...🎭

நேசம் - 28



Disclaimer

இளகிய மனம் இருந்தால் தவிர்ந்து கொள்ளவும். இனி வரும் அதிதியாயங்கள் வாசிக்க பொறுமை அவசியம். இழப்புகளை தாங்கும் மனநிலை சில விடயங்களை ஏற்கும் பக்குவம் மிக அவசியம். கதையின் தேவைக்காக சில வன்முறை காட்சிகள் வசன நடை முகம் சுழிக்கும் வகையில் வரக்கூடும் . விரும்பாதவர்கள் தவிர்ந்து கொள்ளலாம். அனைத்து விமர்சனங்களும் ஏற்கப்படும். அடுத்த அடுத்த அத்தியாயங்களுக்காய் பொறுமையாக காத்திருப்பது அவசியம்.


🤍🍂🤍🍂🤍🍂🤍🍂


கைநழுவிய அலைபேசியை பிடித்திடவும் திராணியில்லாமல் தடுமாறிக் கொண்டே சுவற்றில் சாய்கிறேன்.

என் கண் முன்னே காணும் காட்சியில் விழிகள் விரிந்து அடி வயிற்றில் பயப்பந்து உருளுகிறது.

மூச்சுக்காற்று சத்தம் கூட வெளியில் கேட்காத அளவு மூக்கையும் வாயையும் சேர்த்து மூடிக்கொண்டு ரித்து வயிற்றில் முகம் புதைத்துக் கொண்டு தூங்கும் ஆலிஸை பார்க்கிறேன்.

முதுகை கிழித்துக் கொண்டு இரத்தம் சொட்ட சொட்ட நீண்டு வளர்ந்திருந்த சிறகை விரித்து போர்வையாக்கி ரித்துவை மொத்தமாய் அவனுள் அடக்கி இருந்தான்.

திடீரென பார்ப்பதற்கு ரித்துவை முழுங்கி விட்டு அவன் குப்புற படுத்து தூங்குவது போல இருந்தது.

வியர்வை ஆறாய் வழிய தடுமாறிக் கொண்டே அறையை விட்டு வெளியேறுகிறேன்.

அங்கே தன்னம் வீங்கி உதடுகள் கிழிந்து ரத்தக்காயத்துடன் நின்றிருந்தாள் நித்யா.

உச்ச கட்ட கோபத்தில் நவீன் இருக்க அவனை அடிப்பதற்காக அவன் தந்தை கை தூக்கி நின்றார்.

எதையும் யோசிக்காமல் நவீனுக்கு முன்னால் போய் நிற்கிறேன் ஓங்கிய கரங்களைப் பிடித்தபடி.
என் கையைத் தட்டி விட்டவர் யார் என பார்க்காமலேயே அடித்திட அடி இடி போல என் கன்னத்தில் இறங்கியது.

🎭 பிழைத்த உதிர கீறல்கள் பிழையா நேசத்தில்... 🎭    Wo Geschichten leben. Entdecke jetzt