நேசம் 21

2 0 0
                                    

🎭 *பிழைத்த உதிர கீறல்கள் பிழையா நேசத்தில்...* 🎭

*நேசம் - 21*

காதல்
..
..
..
..
..
..
சொல்லும் போதே தேனென கசந்திடுவதால் பிடிக்கும்

வலிக்கும் என தெரிகையில் பிடிக்கும்

ஒரு சாலையில் நிழலாய் நிலைப்பதால் பிடிக்கும்

இரகசிம் என்பதால் பிடிக்கும்

சிரிப்பு என்பதால் பிடிக்கும்

கோபம் என்பதால் பிடிக்கும்

அழுகை என்பதால் பிடிக்கும்

விரல் பிடிக்கும் நொடிக்காய்
ஏங்கும் போது பிடிக்கும்

அடம் பிடிக்கையில் பிடிக்கும்

காதோர சிலிர்ப்பில் பிடிக்கும்

குரல் பதிவுகளில் பிடிக்கும்

என்னுடையது என்ற உரிமையில் மட்டுமே பிடிக்கும்

எனக்கு இல்லை எனத் தெரிந்தும்
பார்வை வீச்சாவது தீண்டாதா என்பதால் பிடிக்கும்

தூக்கம் தொலைப்பதால் பிடிக்கும்

To Rithu_💕

கையில் இருந்த அந்த கசங்கிய தாளை எத்தனை முறை தான் படித்திருப்பால் என்றும் தெரியவில்லை விழிகளில் துளிர்த்த கண்ணீரோடு அமர்ந்திருக்கிறாள்.

அவளை எந்த உணர்ச்சியும் இல்லாமல் பார்க்கிறேன்.

என் மீது நேசமாய் ஒரு கை படிகிறது.
எந்த எதிர் வினையும் இல்லாமல் அலட்சியமாக ஏறிட்டுப் பார்க்கிறேன்.

இயல்பிலேயே ரத்தமாய் சிவந்து கிடந்த அதரங்கள்
அழகாய் என்னை மயக்கிட மை தீட்டிய அம்பகம் போதை கிளப்பிட மோகமாய் எனை உறுத்து விழிக்கிறாள் அவளின் சாயலில் இருந்த இவள்.

நாடி நரம்புகள் சூடேறி புடைக்க என் சிங்கப் பற்கள் நொடி பொழுதில் வெளிவந்தது கோரமாய் .

அழுது கொண்டிருந்த மற்றவள் எதையும் கண்டு கொள்ளாது அவளவனையே மணக்கண்ணில் ஓவியம் திட்டிக் கொண்டிருந்தாள்.

🎭 பிழைத்த உதிர கீறல்கள் பிழையா நேசத்தில்... 🎭    Hikayelerin yaşadığı yer. Şimdi keşfedin