promo

16.3K 204 87
                                    

பாடுபெயலோ கண்ணம்மா

நின் பார்வையில்பித்தனானேன்

காற்சுழலோ கண்ணம்மா

நின் கருவிழியில் கட்டுண்டேன்

மூடுபனியோ கண்ணம்மா

நின் மந்தகாசப் புன்னகையில்

மதி இழந்தேன்

காதல் போதையோ கண்ணம்மா

நின் மௌனத்தையும் மொழிபெயர்த்தேன்

ஆழக் கடலோ கண்ணம்மா

நின் மனஆழத்தை அளக்க நினைத்து

அயர்ந்து போனேனடி

வீழும் விண்மீனோ கண்ணம்மா

நின் விழிவிசையில்

உன் வாசல் வந்தேன்

என்று விக்ரம் நவ்யாவை பார்த்து கவி வடிக்க அவளோ வெட்கப்புன்னகை செய்தவள் அவன் கரத்தில் தன் கரத்தை கோர்த்துக்கொண்டு அவன் கண்ணோடு தன் கண்ணை உறவாட விட அவர்களின் இணைந்த கைகளை வக்கிரத்துடன் நோக்கியதொரு உருவம் ."உன்னை விட மாட்டேன் விக்ரம் "என்று அவ்வுருவம் சூழுரைக்க அவ்வுருவத்தின் சபதம் நிறைவேறுமா ?பயணிப்போம் இவர்களுடன் இக்கதையினிலே.

hi நாந்தா நாந்தா நானே தான் .தாலாட்டும் சங்கீதம்ல மிச்ச pairsah அம்போன்னு விட்டுட்டியே அப்டினு நீங்க சொன்னதுக்காக மறுபடி வந்துருக்கேன் விக்ரம் நவ்யாவோட காதல் கதையோடு மற்ற காதல் புறாக்களையும் இணைத்த தாலாட்டும் சங்கீதத்தின் தொடர்ச்சி கண்ணுக்குள்ளே உன்னை வைத்தேன் கண்ணம்மா கதை .

கண்ணுக்குள்ளே உன்னை வைத்தேன் கண்ணம்மா (முடிவுற்றது)Where stories live. Discover now