எவ்வளவோ முயற்சி செய்தும் உறக்கம் வராமல் போக கட்டிலில் இருந்து எழுந்த நவ்யா அருகே ஸ்வஸ்திகா உறங்கி விட்டாளா என்று பார்க்க அவளோ தலையணையை கட்டிப்பிடித்துக்கொண்டு ஏதோ பிதற்றியபடியே உறங்கிக்கொண்டிருந்தால்.
அவள் உறக்கம் கலையா வண்ணம் எழுந்தவள் தங்களுக்கு வழங்கப்பட்டிருந்த அறையில் இருந்து வெளியே வர ஜன்னல் வழியே வெளியே பார்த்தவள் கண்களில் பட்டான் அங்கே இருந்த பெஞ்சில் அமர்ந்து வானத்தை வெறித்துக்கொண்டிருந்த விக்ரம்.
அவனை கண்டவள் "இவரு எதுக்கு இங்க உக்காந்துருக்காரு ?"என்று நினைத்துக்கொண்டே உள்ளே அறையில் சென்று ஒரு சால்வயை எடுத்து தன் மேல் போர்த்திக்கொண்டவள் அவன் அமர்ந்திருக்கும் இடத்தை நோக்கி நடந்தால்.இரவு நேரம் ஒரு ஊசி விழுந்தாலும் பெரும் இரைச்சலாய் கேட்கும் அளவிற்கு அமைதியாய் இருக்க அவ்விடத்தின் குளிர் அந்த கனத்த சல்வரையும் மீறி அவள் உடலை நடுங்கச்செய்தது .
அவன் அருகில் நடுங்கிக்கொண்டே சென்றவள் "இந்நேரத்துல இங்க என்ன பண்றீங்க விக்ரம் மேல shawl கூட போர்த்தாம இப்டி குளுருது "என்க
அவனோ அவளை ஒரு பார்வை பார்த்தவன் மீண்டும் வானத்தை வெரிக்கத் துவங்க இவளோ மனதிற்குள் பொறுமியவள் இனி பொறுத்து போனால் சரிப்பட்டு வராது என்று அவன் எதிர்பாரா நேரம் அவன் மடியில் ஏறி அமர்ந்தவள் அவனிற்கும் சேர்த்து சால்வாயை போர்த்தி விட்டால் .
அவள் தன் மடியில் அமர்ந்ததும் அதிர்ந்து நோக்கியவன் அவளை விளக்க பார்க்க அவளோ மேலும் வசதியாய் அவன் மேல் ஏறி அமர்ந்து கொள்ள அவனோ பல்லை கடித்தவன் "நவ்யா எந்திரிடி "என்க
அவளோ "ஏன் கோவமா இருக்கீங்கன்னு சொல்லுங்க நா எந்திரிக்கிறேன் "என்க
அவனோ வேறு புறம் முகத்தை திருப்பி கொள்ள அவளோ உன்னை அவ்வளவு எளிதில் விட மாட்டேன் விக்ரம் என்று மனதில் நினைத்தவள் அவன் தோளில் தன் முகத்தை வைத்து கொண்டு அவனை கழுத்தோடு சேர்த்தணைக்க அவன் உடல் ஒருமுறை சிலிர்த்தடங்கியது.
YOU ARE READING
கண்ணுக்குள்ளே உன்னை வைத்தேன் கண்ணம்மா (முடிவுற்றது)
General Fictionபாலையாய் இருந்த அவன் வாழ்வில் பாடுபெயலாய் அவள் வந்த கதை .மழையென வந்தவள் நதியென பாய்வாளா கானல் நீரென மறைவாளா சேர்ந்து பயணிப்போம் விடை அறிய