இங்கே கலவரம் துவங்கப்பட்டிருக்க அங்கோ கதிரவனின் செங்கதிர்கள் தன ஒளியை இவ்வுலகத்திற்கு பரப்ப நவ்யாவோ தூக்கம் கலைந்தவள் கண்களை திறவாமலே தான் படுத்திருந்த இடமும் தான் பிடித்திருந்த இடமும் தந்த சுகத்தில் மேலும் அதற்குள் புதைய அவள் முகத்தில் துணி போன்ற ஏதோ ஒரு பொருள் தட்டுப்பட பட்டென கண்களை திறந்தவள் தான் இருக்கும் இடத்தை உணரவே சற்று நேரமானது.
அவள் தன் தலையை நிமிர்த்தி பார்க்க அங்கோ விக்ரம் கட்டிலின் பின்னே இருந்த தடுப்பில் தலையை சாய்த்து அவள் தலை மேலே ஒரு கையையும் அவள் கைகளுக்குள் மறுகையையும் வைத்துக்கொண்டு அமர்ந்த வாக்கிலே உறங்கிக்கொண்டிருந்தான் .தான் அவன் மடியில் படுத்திருப்பதை உணர்ந்தவள் சட்டென்று எழ அவனோ உறக்கத்திலேயே அவள் தலையை பிடித்து தன் மடியிலேயே அழுத்தியவன் அவள் தலையை தட்டி கொடுக்க அவளிற்கோ அவன் செய்யும் இச்செயல் இறந்த தன் அன்னையை ஞாபகப்படுத்தியது .
அவள் கண்களில் புறப்பட்ட கண்ணீர் அவள் கன்னத்தில் வழிந்து அவன் மடியை நனைக்க தன் மேல் ஏதோ ஈரம் படர்வதை உணர்ந்தவன் அப்பொழுதே கவனித்தான் நவ்யா அவன் மடியில் படுத்துக்கொண்டு அழுவதை ,உடனே தூக்கம் தூரமாய் போக அவளை நிமிர்த்தியவன் "என்னாச்சுடா நவி என்னாச்சு ஏன் அழுகை" என்க
அவளோ அவனை அணைத்துக்கொண்டவள்"மேரி மேரி( என்னுடைய என்னுடைய ) மா .....ஏன் ஏன் என்ன விட்டுட்டு போனாங்க விக்ரம் ".உங்களுக்கு தெரியுமா அவுங்க இருந்தவரைக்கும் என் கையாள நா சாப்பிட்டதே இல்ல, ஸ்கூலுக்கு போகேல எங்கம்மா ஊட்டிவிடுவாங்க எங்கப்பா சடை பின்னி விடுவாங்க .
ஏன் அத்தனை கார் இருந்தும் எனக்கு பைக் புடிக்கும்னு எங்கப்பா என்ன பைக்ல தான் கூட்டிட்டு போவாரு .ஒரு ஒருநாள் கூட நா அவுங்கள விட்டுட்டு இருந்ததே இல்ல விக்ரம் எங்கம்மாவையும் அப்பாவையும் கட்டிபுடுச்சுட்டு தான் தூங்குவேன் தெரியுமா ஏன் ?ஏன்? விக்ரம் அவுங்க என்ன விட்டுட்டு போனாங்க ?"என்றவள் உடைந்து அழ
YOU ARE READING
கண்ணுக்குள்ளே உன்னை வைத்தேன் கண்ணம்மா (முடிவுற்றது)
General Fictionபாலையாய் இருந்த அவன் வாழ்வில் பாடுபெயலாய் அவள் வந்த கதை .மழையென வந்தவள் நதியென பாய்வாளா கானல் நீரென மறைவாளா சேர்ந்து பயணிப்போம் விடை அறிய