அவர்கள் இருவரும் இறுக்கி கட்டிக்கொண்டு நிற்பதை பார்த்து அனைவரும் திகைத்து போய் நிற்க ஆதித்தனோ
"அட பாவிங்களா" என்று வாய் விட்டே புலம்ப அப்பொழுதே அவர்கள் அணைத்திருப்பதில் ஏதோ வித்தியாசமாய் பட ஆதித்தன் சற்று நெருங்கி பார்க்க ஸ்வஸ்திகாவோ சரணின் பிடியில் இருந்து விலகப்போராடிக்கொண்டே அவனை கண்ட கண்ட வார்த்தையால் கழுவி ஊற்றிக்கொண்டிருக்க சரனோ துப்புனா தொடச்சுக்குவேன் என்பதை போல் ஈஈஈஈஈ என்று இளித்துக்கொண்டே அவளை அணைத்திருந்தான்.
எப்படியோ அவனது பிடியிலிருந்து போராடி விடுபட்ட ஸ்வஸ்திகா அவனை தள்ளி விட்டு முறைக்க சரணோ ஈஈஈ என்று அதற்கும் இளித்தான் .ஒரு கையில் bandage இருக்க மற்றொரு கையிலிருந்த tripsai அவள் முழித்த பின்பு அப்பொழுதே கழற்றி இருந்தனர் .அவன் இளிப்பதை பார்த்தவள் மேலும் கோபமாகி அருகில் அடிக்க எதையாவது தேட ஆதித்தனோ தன் கையில் கிடைப்பதை எல்லாம் ஸ்வஸ்திகாவின் கையில் கொடுத்துக்கொண்டிருக்க அவளோ சரணை திட்டிக்கொண்டே குறிபார்த்து அடித்துக்கொண்டிருந்தாள்.
ஆதித்தனை பார்த்து அட கொலைகாரா என்று முணுமுணுத்து சரண் அந்த அறை முழுதும் ஸ்வஸ்திகாவின் அடியில் இருந்து தப்ப ஓடிக்கொண்டிருந்தான் .
ஸ்வஸ்திகா "எரும மாடே எரும மாடே அதான் போனு சொல்லிடேல்ல அப்பறோம் என்ன dashuku இப்போ வந்து கட்டிப்பிடிக்குறடா?என்ன பாத்தா என்ன பைத்தியம் மாறி இருக்கா?"என்க
சரணோ ஓடிக்கொண்டே "பாத்தா இல்லடி கத்திரிக்கா ஆனா பேசுனா அப்டி தான் இருக்கு "என்க
அவளோ "அடிங் கொய்யால என்ன இனிமே கத்திருக்கானு கூப்பிட்ட மண்டைய ஒடச்சு மாவிளக்கு வச்சுருவேன்டா. ஒரு வாரமா பேசாம என்ன உயிரோட கொன்னுட்டு இப்போ கத்திருக்கானு சொல்றியா .இந்த ஒரு வாரமா கத்திரிக்கா சமைக்கேல கூட உன் ஞாபகம் தான் வரும் தெரியுமாடா?எல்லோரப் பத்தியும் யோசிச்சியே என்ன பத்தி ஒரு செகண்ட் கூட யோசிக்கலேல நீ ?அப்போ நீ என்ன பத்தி யோசிக்கனும்னா நா அறுத்துக்கிட்டு hospitallaஹ் கிடைக்கணும் அப்டி தான"என்றவள் அழத்துவங்கினாள்.
YOU ARE READING
கண்ணுக்குள்ளே உன்னை வைத்தேன் கண்ணம்மா (முடிவுற்றது)
General Fictionபாலையாய் இருந்த அவன் வாழ்வில் பாடுபெயலாய் அவள் வந்த கதை .மழையென வந்தவள் நதியென பாய்வாளா கானல் நீரென மறைவாளா சேர்ந்து பயணிப்போம் விடை அறிய