அவன் அமர்ந்திருந்த தோரணையேஅவனின் கோபத்தின் அளவை எடுத்துக்கூற அதிதியையும் நவ்யாவையும் அவர்கள் அறைக்கு அனுப்பிய சைந்தவி வித்யுதின் அருகில் அமர்ந்து அவன் கரத்தை பற்றினாள்.
அவன் கையை உருவப்போக அவன் கையை மேலும் அழுத்தி பிடித்தவள் அவர்களின் அறையை நோக்கி அழைத்து சென்றாள்.
சைந்தவி கர்பம் தரித்தபின் கீழே இருந்த அறையையே தங்கள் அறையாய் மாற்றி விட்டிருந்தான் வித்யுத் .அவனை அழைத்து வந்து அங்கிருந்த sofaaவில் ஒரு ஓரத்தில் அமர்த்தியவள் இன்னொரு ஓரத்தில் அமர அனிச்சை செயலாய் அவள் மடியில் தலை வைத்து படுத்துக்கொண்டான் வித்யுத் .
அவன் தலை முடியை கோதியவள் "ஏன்டா இவ்ளோ டென்ஷன் ஆகுற லவ் தான பண்ணா ?நானும் நீயும் லவ் பண்ணி தான கல்யாணம் பண்ணுனோம் ? அதிதியும் ஹரியும் கூட லவ் தான பன்றாங்க அதுவும் ஸ்கூல்ல இருந்து. ஸ்கூல்ல லவ் பண்றதே தப்பு அதுக்கே நீ திட்டல ஏன்டா இப்டி நவ்யா விக்ரம லவ் பன்றேன்னு சொன்னப்போ மட்டும் இவ்ளோ கோவப்படுற "என்க
அவனோ "சது நீயும் நானும் லவ் பண்ணோம்னா உங்க அப்பா பெர்மிஸ்ஸின் குடுத்பறோம் தான் நாம loversaave கமிட் ஆனோம்.உங்க அப்பா அம்மா சம்மதிக்கலேனா நா காலேஜ் முடுச்சு ஒர்க் ஜோஇன் பண்ற வரைக்கும் உன் பக்கத்துல கூட வந்துருக்க மாட்டேன் அண்ட் ஹரியும் அதிதியும் ஸ்கூல் படிக்கேல லவ் பண்ணப்போ ஏன் நா திட்டலேன்னா அப்போ அந்த வயசுல எதை செய்யாதான்னு சொல்றோமோ அதை தான் செய்ய தோணும் அதான் சுதந்திரத்தை தப்பா பயன்படுத்தாத வரைக்கும் பரவால்லன்னு விட்டு வச்சேன் .அதிதி மார்க்ஸ் down ஆனதும் உங்க அப்பட சொல்லி அவனை us அனுப்சு வச்சேன்(ஹெஹெஹெ இவன் பாத வேல தான்பா ஹரி ஆறு வ்ருஹ்ஷம் us போனது) .ஹரி நல்ல பையன் பட் இங்க அப்டி இல்ல "என்க
சைந்தவி "அப்போ இப்போ விக்ரம் நல்லவனா இல்லங்குறியா ?"என்க
வித்யுதோ இல்லை என்பதை போல் தலை அசைத்தவன் "இப்போ விக்ரம் ஒரு பக்கா gentlemannaah தான் இருக்கான்.அவன் நல்லவனுக்கு நல்லவன் கெட்டவனுக்கு கெட்டவன் தான். ஆனா அவன் முதல்ல வாங்கி வச்ச பேரு?வினய் அன்னைக்கு கூட கால் பண்ணான் அன்னைக்கு பிஸ்னஸ் பார்ட்டிக்கு போனப்போ நவ்யா கிட்ட ரெண்டு பேரு வந்து நீ விக்ரமோட வந்தவ தான உன் ரேட் என்னனு கேட்ருக்கானுங்க .இப்டி இருக்கேல ஒரு அண்ணனா எப்படி என் தங்கச்சி எல்லா ஏச்சு பேச்சையும் வாழ்க்கை பூராம் கேட்கட்டும்னு அவனுக்கு கட்டி குடுக்க சொல்ற ?"என்றான்.
YOU ARE READING
கண்ணுக்குள்ளே உன்னை வைத்தேன் கண்ணம்மா (முடிவுற்றது)
General Fictionபாலையாய் இருந்த அவன் வாழ்வில் பாடுபெயலாய் அவள் வந்த கதை .மழையென வந்தவள் நதியென பாய்வாளா கானல் நீரென மறைவாளா சேர்ந்து பயணிப்போம் விடை அறிய