ஐந்து வருடங்களுக்கு பிறகு ,
மேகம் சிறிது சிறிதாய் தன் காதலனாம் கதிரவனின் கதிர்பட்டு வெட்கம் கொண்டு விலகி ஓடிட தன் காதலியின் வெட்கம் தந்த கர்வத்தில் கதிரவனும் மெல்ல மெல்ல மேலெழும்பி தன் ஒளியை உலகிற்கு பரப்பி தன் மேகக்காதலியை ஆட்கொள்ள மேகமோ தன்னவன் ஒளிச்சிறையில் சிறைப்பட்டு மேலும் சிவந்து செக்க சிவந்த வண்ணமாய் காட்சிஅளித்திருந்த அந்த விடிந்தும் விடியாத வேளையில் விக்ரமின் வீட்டில் ஒரே களோபரமாக இருந்தது.
ஐந்து வருடங்களுக்கு முன் இளம்கன்னியாய் உலா வந்த நவ்யாவின் முகத்திலும் உடலிலும் இந்த ஐந்து வருடத்தில் நிறைய மாற்றங்கள் இருந்தது .
முதலில் ஒடிசலாய்,முகம் ஒட்டி இருந்தவள் இந்த ஐந்து வருடத்தில் முகம் தாய்மையின் உபயத்தால் பூசி உடலும் சற்று பூசி இருக்க ஓட முடியாமல் தன் மகனின் பின் ஓடிக்கொண்டிருந்தாள் "டேய்ய் அபி ஒழுங்கா நின்னுரு அடி வாங்காத.ஏன்டா குளிக்குறதுக்கு இவ்ளோ பாடு படுத்துற "என்க
அவனோ திரும்பி பார்த்து "முடுஞ்சா என்ன பிடிமா "என்று பழிப்பு காட்டிவிட்டு சென்றான் விக்ரமின் xerox copy போல் இருந்த அவளின் நான்கு வயது புதல்வன் அபிநவ்.
அவன் பின்னேயே ஓடியவள் தோட்டத்திற்கு சென்றதும் அவனை அமுக்கி பிடித்துவிட அவனோ அவள் கைகளில் திமிறினான் "அம்மா விடுமா pleasema ப்ளீஸ் மா" என்று அவன் கெஞ்ச கெஞ்ச அவனை உள்ளே தூக்கி கொண்டு வந்தவள் பாத்ரூமிற்குள் அழைத்து சென்று அவனை தண்ணீர் தொட்டியில்(bathtub ) போட்டு தலை தேய்த்து விட துவங்கினால் "ஷோபா முடிலடா என்னால ஒரு தலை தேச்சு குளிக்குறதுக்கு இந்த பாடாடா படுத்துவ"என்க
BẠN ĐANG ĐỌC
கண்ணுக்குள்ளே உன்னை வைத்தேன் கண்ணம்மா (முடிவுற்றது)
Tiểu Thuyết Chungபாலையாய் இருந்த அவன் வாழ்வில் பாடுபெயலாய் அவள் வந்த கதை .மழையென வந்தவள் நதியென பாய்வாளா கானல் நீரென மறைவாளா சேர்ந்து பயணிப்போம் விடை அறிய