ஆதித்தன் சரணின் சட்டையை பிடித்து கத்திக்கொண்டிருக்க சரணோ அந்த சொரனையும் அன்றி icu வாசலையே பார்த்துக்கொண்டிருந்தான்.
ஆதித்தன் அருகில் வந்த வித்யுத் அவன் கையை சரணின் சட்டையிலிருந்து விளக்கியவன் "ஆதி என்ன பண்ற இது ஹாஸ்பிடல் கன்ட்ரோல் yourself "என்றவன் சரணின் புறம் திரும்பி "ஸ்வஸ்திகாக்கு இப்போ ஒன்னும் இல்ல பட் ஷி ஐஸ் suffering from போஸ்ட் traumatic stress disorder .அவ கண்ணை தொறந்தா அவளுக்கு பிடிக்காத ஏதோ ஒன்னு நடந்துருமோனு ஆழ்மனசுல பதிஞ்சுருச்சு அதுனால அவள் கண்ணை தொறக்காமயே இருக்கா .இப்டியே continue ஆனா கோமாகும் போக chances இருக்கு ."என்க
தலையில் கை வைத்த சரண் அப்படியே அமர்ந்துவிட்டான்.அவன் கண்களிலிருந்து கண்ணீர் வழிந்துகொண்டே இருந்தது.அவனிடம் வித்யுத் செல்ல போக வித்யுத்திடம் வந்த டாக்டர் "டாக்டர் patient சரண் சரண்னு முணுமுணுக்குறாங்க யார் இங்க சரண் ?"என்க
வேகவேகமாய் எழுந்த சரண் அந்த டாக்டரிடம் வந்து "நா..... நா........ தான் சரண் மே ஐ கோ இன் ?"என்று கேட்டவாறே வித்யுத்தை நோக்க அவன் செல் என்று கூறிய அடுத்த நொடி உள்ளே சென்றிருந்தான் சரண் .
இங்கே நடக்கும் எதுவும் புரியாத வித்யுத் ஆதியிடம் "ஆதி என்னாச்சு சந்தோஷமா சுத்திட்டு இருந்த பொண்ணு திடீர்னு எப்படி suicide அட்டெம்ப்ட் அண்ட் நீ ஏன் சரண புடுச்சு அடிக்க போற ?"என்க
ஆதியோ அவனது தந்தையையம் சரணின் அன்னையையும் ஒருசேர முறைத்தவன் அவர்களை காட்டி "இந்தா என்ன பெத்தவரு இருக்காருல்ல அவருக்கு லெட்சத்துல சம்பாதிக்கிற மாப்ள கெடச்சா தான் மகள் சந்தோஷமா இருப்பா ,இந்தா இவுங்க இருக்காங்கள்ல சரண பெத்தவுங்க இவுங்களுக்கு இவுங்க அண்ணன் சொன்னது தான் இப்போ வேத வாக்கு அந்தா அந்த வீனா போனவனுக்கு அவுங்க அம்மா சொல்றது தான் வேத வாக்கு இவுங்க பண்ண தப்புக்கு இப்போ என் தங்கச்சி பலி ஆடாகி உயிர்க்கு போராடிட்டு இருக்கா "என்க
வித்யுத்தோ"புரியல "என்க
ஆதி கூறத்துவங்கினான் .
YOU ARE READING
கண்ணுக்குள்ளே உன்னை வைத்தேன் கண்ணம்மா (முடிவுற்றது)
General Fictionபாலையாய் இருந்த அவன் வாழ்வில் பாடுபெயலாய் அவள் வந்த கதை .மழையென வந்தவள் நதியென பாய்வாளா கானல் நீரென மறைவாளா சேர்ந்து பயணிப்போம் விடை அறிய