மூன்று வருடங்களுக்கு முன் ....
சாரதா மருத்துவமனையில் சரண் குழந்தைகள் நல நிபுணராக பணியாற்றிக்கொண்டிருந்தான் .அவனது கேபினில் ஒரு ஐந்து வயது பெண் குழந்தையை அவள் தாய் மடியில் வைத்திருக்க சரணோ சிரித்துக்கொண்டே "ஹே பார்பி டால் எப்படி இருக்கீங்க ?"என்று கேட்க
அந்த குழந்தையோ கண்களை விரித்து கையை ஆட்டி "சூப்பராக இருக்கேன் சாரு "என்றவள் அச்சு ஹச்சென்று அடுத்தடுத்து தும்ம
சரண் "ஆஹா என் பிரின்செஸ்க்கு சளி புடுச்சுக்கிச்சா ஐஸ்கிரீம் சாப்டீங்களா ?"என்க
அக்குழந்தையோ தலையை தொங்கப்போட்டது பாவமாய் "ஆமா சாரு "என்க
அவனோ "குளிர் காலத்துல ஐஸ்கிரீம் சாப்பிடலாமா ?"என்றவன்
அடுத்து அக்குழந்தையை பரிசோதித்து விட்டு அவள் அம்மாவிடம் "ஒண்ணுமில்ல mam கோல்டு தான் இந்த டேப்ளெட்ஸ் குடுங்க சரி ஆயிடும் என்றவன் மாத்திரைகளை எழுதிக் கொடுக்க
மாத்திரைகளை பார்த்த குழந்தை முகத்தை அஷ்டகோணலாய் மாற்றி "மாத்திரை வேணாம் சாரு கசக்கும் ஊவா "என்று நாக்கை வெளியே நீட்ட
அவள் மூக்கை பிடித்தாட்டிய சரண் "மாத்திரை சாப்ட்டா தான் பார்பி டால்க்கு கோல்ட் போகும். நீங்க டேப்லெட் சாப்பிடுவீங்களாம் சாரு உங்களுக்கு சாக்லேட் வாங்கி தருவேனாம் ஓகே "என்க
கைகளை தட்டி சிரித்த குழந்தை தலையை தலையை ஆட்டி" நெஸ்ட் தடவை எனக்கு சாக்லேட் வேணும் பை சாரு" என்று அவன் கன்னத்தில் இதழ் பதித்து விட்டு கை ஆட்டிவிட்டு சென்றது .
அக்குழந்தையை பார்த்து சிரித்தவன் அடுத்தடுத்து வந்த casegalai கவனிக்க துவங்கினான் .பின் வேலையை முடித்தவன் வெளியே சென்று காரை எடுத்து விட்டு தன் வீட்டிற்கு செல்ல அவன் வீட்டில் யாருமே இல்லை .
என்னடா இது இவ்ளோ அமைதியா இருக்கு சரி இல்லையே என்று யோசிக்க அவன் கழுத்தை வளைத்து கத்தியை வைத்து முகத்தை கருப்பு துணியால் மறைத்திருந்த ஒரு வலிமையான கை.
YOU ARE READING
கண்ணுக்குள்ளே உன்னை வைத்தேன் கண்ணம்மா (முடிவுற்றது)
General Fictionபாலையாய் இருந்த அவன் வாழ்வில் பாடுபெயலாய் அவள் வந்த கதை .மழையென வந்தவள் நதியென பாய்வாளா கானல் நீரென மறைவாளா சேர்ந்து பயணிப்போம் விடை அறிய