விக்ரம் கூறிய திட்டம் கேட்க எளிதாய் இருந்தாலும் அதை செயல்படுத்து முடிப்பது அத்தனை எளிதாய் இல்லை.அவர்கள் தேர்ந்தெடுத்த கம்பனிகளின் ப்ரதிநிதிகளை வரவழைத்து சந்தித்து பின் அவர்களிடம் ஒப்பந்தத்தில் கையெழுத்தி வாங்கி அவர்களின் வேலையை விளக்கி ஒருமுறை அக் கம்பெனிகளின் மேலதிகாரிகளையும் சந்தித்து பேசி முடிப்பதற்குள் போதும் போதும் என்றாகி விட்டது (சொன்ன எனக்கே இவ்ளோ tired ஆகுதுன்னா பாத்துகோங்களேன் )அனைத்தையும் ஒரு வழியாய் முடித்து விட்டு அலுவலகத்தை விட்டு இருவரும் கிளம்புகையில் மணி இரவு பத்திற்கு மேல் ஆகி இருந்தது.
கீழே வந்ததும் விக்ரம் காரில் ஏறி "நவ்யா வா நானே ட்ரோப் பண்ணிடுறேன் லேட்டா ஆயிருச்சு "
நவ்யா "இல்ல வேணாம் விக்ரம் லேட்டா ஆயிருச்சு நீங்க போங்க "
அவனோ "அதே தான் நானும் சொல்றேன் வா "என்க
நவ்யாவோ முறைத்தவள் "நா தான் பாத்துக்குறேன்னு சொல்றேன்ல போங்க "என்க
அவனும் "சரி நா கிளம்புறேன் நீ safeaah போ "என்றுவிட்டு சென்று விட அவளோ scootyai வந்து ஸ்டார்ட் செய்ய அது ஸ்டார்ட் ஆக மறுத்தது .
நேற்றே இங்கு scootyai விட்டு வந்ததால் நவ்யா காலையில் வித்யுதுடன் தான் வந்தால் .
இன்று ஸ்டார்ட் செய்தாலோ scooty தன் வேலையை செவ்வெனே செய்து கெடுத்து விட்டது .அவள் எவ்வளவோ முயற்சி செய்தும் scooty ஸ்டார்ட் ஆக வில்லை.ஓங்கி scootyai ஒரு மிதி மிதித்தும் அது செயல்படாமல் போக பதட்டத்தில் நகத்தை கடிக்க ஆரம்பித்தாள் நவ்யா இரவு உணவு உண்ணாத பசி வேறு அவளை பாடாய் படுத்தியது . அவள் மனமோ "அப்போவே சொன்னான் ஒழுங்கா கூட போயிருக்கலாம் "என்று அவளை சமயம் பார்த்து கிண்டலடிக்க அவளோ தன்னை தானே நொந்து கொண்டு scootyai அங்கேயே விட்டு விட்டு வெளியே வந்து நடக்க துவங்க.சற்று நேரத்திற்கு பின் அவளை நான்கு பேர் பின்தொடர்வதைப் போல் இருக்க அவள் திரும்பி பார்க்க அங்கோ நான்கு ஆடவர்கள் அவளை பின் தொடர்ந்து கொண்டிருந்தனர் .
YOU ARE READING
கண்ணுக்குள்ளே உன்னை வைத்தேன் கண்ணம்மா (முடிவுற்றது)
General Fictionபாலையாய் இருந்த அவன் வாழ்வில் பாடுபெயலாய் அவள் வந்த கதை .மழையென வந்தவள் நதியென பாய்வாளா கானல் நீரென மறைவாளா சேர்ந்து பயணிப்போம் விடை அறிய