31

3.3K 169 96
                                    

 ஸ்வஸ்திகாவை கல்லூரியில் இருந்து தன் பைக்கில் ஒரு அம்மன் கோயிலிற்கு அழைத்து வந்திருந்தான் சரண்.

கோவில் வந்ததும் "ஸ்வஸ்தி இறங்குடி "என்க கண்களை திறந்து பார்த்த ஸ்வஸ்திகா கோவிலை கண்டதும் சரணை குழப்பமாய் பார்த்தாள்.

ஏனெனில் இது வரை சரண் கோயிலிற்கு சென்றோ கடவுளை வழிபட்டோ அவள் பார்த்ததே இல்லை .வருடம் ஒரு முறை அவர்களது குல தெய்வம் கோயிலிற்கு செல்கையில் அங்கிருக்கும் சிறுசுகளுடன் விளையாடிக்கொண்டிருப்பனே ஒழிய கடவுளை கும்பிட்டதில்லை அப்படிப்பட்டவன் இன்று தானே அவளை கோயிலிற்கு அழைத்து வந்திருந்தது குழப்பமாய் இருந்தது .

அவனுடன் குழம்பியபடியே நடந்தவள் அவன் அவள் முடியில் மல்லிகை சரம் சூட்டும் ஸ்பரிசத்தில் தான் தெளிந்தாள்.அவனை பார்த்து லேசாய் முரவளித்தவள் அவனது கையை தன் கையோடு கோர்த்துக்கொண்டு அர்ச்சனை தட்டை வாங்கியவள் அம்மனின் சந்நிதியில் சென்று கண்கள் மூடி பிரார்த்திக்க சரணும் அம்மன் சன்னதியில் கண்களை மூடி அவளுடன் பிரார்தித்தவன் பிரசாதமாக வழங்கப்பட்ட குங்குமத்தை தன் நெற்றியில் வைத்து கொண்டு அவளை பார்க்க அவளோ நீயே வைத்து விடு என்பதை போல் சைகை செய்தாள்.

பின் அவள் கரத்திலிருந்து குங்குமத்தை எடுத்து அவள் நெற்றியில் இட கோவில் மணி அழகாய் ஒலித்தது அதை கேட்ட செவஸ்திகாவிற்கு மனம் நிறைந்தது.பின் அந்த கோவிலை ஒட்டி இருந்த குளக்கரையில் படித்துறைக்கு சென்றவர்கள் அங்கே அமர சரணின் முகமோ அவன் ஏதோ ஒரு சிந்தனையில் உழன்றிருப்பதை எடுத்துரைத்தாது .

அவனது சிந்தனை ரேகைகள் நிறைந்த முகத்தை கண்டவள் அவன் அருகில் நெருங்கி அமர்ந்து அவன் கையை தன கையோடு கோர்த்துக்கொண்டவள் "என்னாச்சு சரண் என் ஏதோ திங்கிங்க்லயே இருக்க ?எப்போவும் சாமி கும்புடாதவன் திடீர்னு நா கேக்காமயே கோவிலுக்கு கூட்டிட்டு வந்துருக்க எனி ப்ரோப்லேம் ?"என்க

அவனோ இடவலமாய் தலை அசைத்தவன் அவள் கையை மேலும் இறுக்கமாய் பிடித்துக்கொண்டு "ப்ரோப்லேம் இல்லடா ஸ்வஸ்தி பட் ...ஏதோ தப்பா நடக்க போற மாறி மனசுல தோணிட்டே இருக்கு பயமா இருக்கு "என்க

கண்ணுக்குள்ளே உன்னை வைத்தேன் கண்ணம்மா (முடிவுற்றது)Where stories live. Discover now