நால்வரும் சென்னைக்கு திரும்பி விட நாட்கள் அதன் போக்கில் அழகாய் சென்றுகொண்டிருந்தது .விக்ரம் நவ்யாவின் காதல் சிறிது ஊடல் நிறைய புரிதலுடன் சென்றுகொண்டிருக்க சரணும் ஸ்வஸ்திகாவும் தாங்கள் காதல் பூத்த தினத்திலிருந்து சண்டைகளுக்கு சற்று விடுமுறை அளித்துவிட்டு சிறகில்லாமல் பறந்து கொண்டிருந்தனர்.
3 மாதத்திற்கு பின்,
அன்று அலுவலகத்தில் வேலை செய்து கொண்டிருந்தனர் விக்ரமும் நவ்யாவும் .அன்று அவர்கள் எடுக்க போகும் புது ப்ரொஜெக்ட்டிற்கான டெண்டர் quotation தயாரித்துக்கொண்டிருந்தனர் இருவரும் .
மும்முரமாய் வேலை செய்து கொண்டிருந்த விக்ரமின் கவனத்தை திசை திரும்புவதை போல் அவனது செல்போன் மணி அடிக்க தான் செய்து கொண்டிருந்த வேலைகளிலிருந்து வெளி வந்தவன் அவன் போனில் இருந்த எண்ணை பார்த்து விட்டு முகம் சுருங்க காதில் வைத்தவன் வெறும் ம்ம் மட்டும் கொட்டினான் .
அவன் செயல்களை கவனித்து கொண்டே இருந்தாள் நவ்யா .அவளும் கவனித்துக்கொண்டு தானே இருக்கிறாள் அவள் இங்கு வேலைக்கு சேர்ந்த 6 மாதங்களில் நாள் தவறாமல் சரியாக மதிய உணவு வேளையிலோ அல்லது அதன் பின் சற்று நேரத்திலோ விக்ரமிற்கு போன் வரும் .
அனைத்து போன் callgalukum சிரித்தமுகமாய் பதிலளிப்பவன் அந்த போனிற்கு மட்டும் ம்ம் என்ற வார்த்தையை தவிர்த்து வேறு எதுவும் சொல்ல மாட்டான் இறுகிய முகத்துடனே பேசி விட்டு வைத்து விடுவான் .
என்ன என்று அவனிடம் கேட்க நினைத்தும் இது வரை அவள் கேட்டதில்லை.பல நாட்களாய் தன் மனதில் அரிக்கும் விஷயத்தை அவனிடம் கேட்கலாம் என்று அவன் அருகில் சென்றவள் அப்புறம் என்ன சொல்லப்பட்டதோ "reach ஆயிட்டிங்கள்ல சரி வரேன் வைங்க போனினை" என்று வேண்டா வெறுப்பாய் கூறியவன் தான் அணிந்திருந்த டை யை கழற்றி தலையில் கைவைத்து அமரவும் தன் எண்ணத்தை மாற்றிக்கொண்டாள்.
அவன் அருகில் சென்று அவன் தலை முடியை கோதியவள் "என்னாச்சு விக்ரம் தலைவலிக்குதா ?"என்க
YOU ARE READING
கண்ணுக்குள்ளே உன்னை வைத்தேன் கண்ணம்மா (முடிவுற்றது)
General Fictionபாலையாய் இருந்த அவன் வாழ்வில் பாடுபெயலாய் அவள் வந்த கதை .மழையென வந்தவள் நதியென பாய்வாளா கானல் நீரென மறைவாளா சேர்ந்து பயணிப்போம் விடை அறிய