அனைவரும் அவரவர் துணையை துரத்திக்கொண்டு செல்வதை பெரியவர்கள் சிறு சிரிப்புடன் நோக்கிக்கொண்டிருக்க அந்த நேரத்தில் உள்ளே வந்தனர் ஷ்ரவனும் வினீஷாவும்.அவர்களிடம் சென்ற வித்யுத் "வாடா வா உன்ன தான் தேடிட்டு இருந்தேன் என்னாச்சு இன்னிக்கு half டே லீவு போட்டுட்டு போய்ட்டிங்க நீயும் இவளும் ?"என்க
ஷ்ரவன் இளித்தவாறு "அது அது மச்சி ...."என்று இழுக்க வினீஷாவோ மலர்ந்த முகம் சற்றே சிவந்து காணப்பட்டாள்.அவர்களின் வதனத்தை வைத்தே என்ன நடந்திருக்கும் என்பதை கணித்த வித்யுத் ஷ்ரவனை மகிழ்வுடன் கட்டிக்கொண்டவன் "congratsda மச்சான்"என்க
சைந்தவியோ வினீஷாவின் அருகில் வந்து அவளிடம் எத்தனை months என்க அவளோ மூன்று என்று கூறினாள்.பின் மற்றவர்களிடமும் அந்த செய்தியை கூற புது உறவுகள் சேர்ந்த சந்தோஷத்தை அனைவரும் பங்கிட்டுக்கொண்டு ஆனந்தத்தில் மிதந்தனர் .அனைவரும் இரவு உணவை அங்கேயே முடிக்க நவ்யாவோ விக்ரமை யாரும் கவனியா நேரம் தோட்டத்து பக்கம் அழைத்து சென்றவள் அங்கிருந்த பெஞ்சில் அவனை அமர வைத்து தானும் அமர்ந்து கொண்டாள்.
அவள் அருகில் அமர்ந்ததும் அவளை தன் கை அணையில் கொண்டு வந்தவன் "சோ நவ்யா மேடம் இன்னும் 2 மாசத்துல மிஸஸ்.விக்ரம் ஆக போறீங்க .எவ்ளோ ஹாப்பியாஹ் இருக்கேன் தெரியுமாடி இன்னைக்கு.என்ன தான் காதலியா இருந்தாலும் relationsaala அங்கீகரிக்கப்பட்டதுகப்ரோம் அது ஒரு தனி பீல் தான் "என்க
நவ்யாவோ"ம்ம் "என்று தலை அசைத்தவள் பின் சற்று தயங்கி "அது விக்ரம் நா அத்தைய கூப்டதுல உங்களுக்கு வருத்தமில்லையே "என்க
அவனோ அவளை நோக்கி முறுவலித்தவன் "என்ன பாத்தா அவ்ளோ கெட்டவனாவாடி தெரியுது ."என்றவன் அவளை அணைத்துக்கொண்டு "உனக்கு ஒன்னு தெரியுமா எனக்கு என் அம்மாவ ரொம்ப புடிக்கும்டி.எல்லாருக்குமே அவுங்க அம்மான்னா ஸ்பெஷல் தான எனக்கும் அப்டி தான். என் அம்மா நடக்கேல பேசேலலாம் ஒரு கெத்து இருக்கும்டி .ஒரு அதிகாரத்தோரணை இருக்கும் அவுங்க கத்திலாம் பேசமாட்டாங்க ஒரு பார்வையிலேயே workersah அடக்கிருவாங்க .
Workersaஹ் எப்படி மதிக்கணும் எப்படி நேர்மையா இருக்கணும் இப்டி பல குணங்கள் நா என் அம்மாவை பார்த்து தான் கத்துகிட்டேன்.ஷி இஸ் மை inspiration .ஆனா ஸ்கூல்ல எல்லா குழந்தைகளுக்கும் அவுங்க அம்மா ஊட்டி விடுவாங்க ,தல சீவி விடுவாங்க, uniform மாட்டிவிடுவாங்கனு சொல்லேளெலாம் ஏன் என் அம்மா என்னோட டைம் ஸ்பென்ட் பண்ண மாட்டேங்குறாங்கனு ஏக்கமா இருக்கும். ஆனாலும் என்னால என் அம்மாவ வெறுக்க முடியல .அவுங்களும் அவுங்க husbandum எனக்கு பர்த்டே அப்போ மட்டும் வந்து பாத்துட்டு போவாங்க. என்ன பெத்த அந்த ஆளுக்கு தான் என் மேல பாசம் இல்ல ஆனா என் அம்மா எனக்கு எப்போவும் சின்ன வயசுல இருந்தே எவ்ளோ வேலை இருந்தாலும் ஒரு நாளைக்கு ஒரு தடவையாச்சும் கால் பண்ணி பேசிருவாங்க.கேர் டேக்கர் வச்சு பாத்துக்கிட்டாங்க. பத்து வயசுல இருந்தே நா கேக்குற அளவுக்கு பணம் எனக்கு பாக்கெட் மணியாஹ் கிடைக்கும் எந்த கேள்வியும் இல்லாம.ஆனால் ஒரு பையனா எனக்கு பணம் தேவைப்படலடி என் அம்மாவோட பாசம் தான் தேவைப்பட்டுச்சு .சின்ன சின்ன ஆசை என் அம்மா மடில படுத்துக்கணும் ,அம்மா கையாள சாப்பிடணும் , அம்மா தல வாரி விடணும் ,அம்மா டிரஸ் செலக்ட் பண்ணி போட்டு விடணும், தல தேச்சு விடணும்னு பட் அதெல்லாம் என்னால ஆச மட்டும் தான் பட முடுஞ்சுது அனுபவிக்க முடியல.எனக்கு அம்மாவோட அரவணைப்பு தேவைப்பட்ட அப்போல்லாம் அவுங்க என் கூட இல்ல இப்போ அவுங்க என்கிட்டே வராங்க ஆனா என்னால ஏத்துக்க முடியல "என்றவன் கண்களில் அப்பட்டமாய் அன்னையின் பாசத்திற்காக அவன் ஏங்கியதன் வலி தெரிந்தது .
YOU ARE READING
கண்ணுக்குள்ளே உன்னை வைத்தேன் கண்ணம்மா (முடிவுற்றது)
General Fictionபாலையாய் இருந்த அவன் வாழ்வில் பாடுபெயலாய் அவள் வந்த கதை .மழையென வந்தவள் நதியென பாய்வாளா கானல் நீரென மறைவாளா சேர்ந்து பயணிப்போம் விடை அறிய