இங்கு இவர்கள் இப்படி இருக்க வீட்டிற்கு வந்த நவ்யாவுக்கோ மனம் ஒரு இடத்தில் நிலை கொள்ளாமல் தவித்தது .
குழம்பிய முகத்தோடு luggageai தூக்கிக்கொண்டு அவள் வீட்டிற்குள் வர வீடோ நிசப்தமாய் இருந்தது .யாரும் வீட்டில் இல்லை என்பதை உணர்ந்து கொண்டவள் நேரத்தை பார்க்க அதுவோ மதியம் ஒன்றென காட்டியது . வேலைக்கு சென்றிருப்பர் என்று சைந்தவிக்கு கால் செய்ய phoneai எடுக்க அதிலோ 100 missed கால் வித்யுத் ,சைந்தவி மற்றும் அதிதியின் எண்களில் இருந்து இருந்தது .
phoneai silent modeil போட்டது நினைவு வர தலையில் அடித்துக்கொண்டவள் சைந்தவிக்கு கால் செய்தால் .
சைந்தவி "ஹே நவி எவ்ளோ தடவ கால் பண்றதுடா ஏன் எடுக்கவே இல்ல நீ ?ஹாப்பி பர்த்டே டா குட்டி .டென்மார்க்ள எல்லாம் ஓகே தான "என்க
நவ்யா "தேங்க்ஸ் அண்ணி.அண்ணி நா இப்போ டென்மார்க்ள இல்ல அண்ணி ஒரு சின்ன ப்ரோப்லேம் மறுபடி இந்தியா வந்துட்டோம்."என்க
அப்புறம் சைந்தவியோ "எது இந்தியா வந்துட்டியா முதல்லயே சொல்றதில்லயா நவி "என்க
நவ்யா "என்னாச்சு அண்ணி எனி ப்ரோப்லேம்? ஒர்க்ல தான இருக்கீங்க ?"என்க
சைந்தவி "இல்லடா ஏதோ நேத்திக்கடன் இருக்குன்னு நாங்க எல்லாரும் ஊருக்கு வந்துருக்கோம் நாளைக்கு தான் சென்னை வருவோம் .ப்ச் முதல்லயே நீ வரது தெருஞ்சுருந்தா நாளைக்கே கெளம்பிருக்கலாம் பர்த்டே அன்னிக்கு தனியா விட்டுட்டேன் "என்க
நவ்யாவோ மெலிதாய் சிரித்தவள் "அச்சோ அண்ணி ஒரு பிரெச்சனையும் இல்ல ஒரு நாள் தான நா இருந்துக்குறேன் வேணா birthdayah postpone பண்ணிருவோம் நாளைக்கு நீங்க பொறுமையா சாமி கும்புட்டுட்டு வாங்க ."என்க
சைந்தவி "ஒரு ஸ்வீட் கூட செஞ்சு வைக்கல நா sorryda .டேக் கேர் பத்திரமா இரு நாளைக்கு காலைல வந்துருவோம் "என்க
நவ்யா "ஓகே அண்ணி டேக் கேர் .என் மருமகள் என்ன பண்ரா?" என்று கேட்க
சிரித்த சைந்தவி "உன் மருமகளா இன்னிக்கு முதல் தடவ அசைவு தெருஞ்சுச்சுடா. சரியான அப்பா புள்ளையா இருப்பா போல முதல் தடவ அசஞ்சதே உன் அண்ணனை திட்டேள தான்.இப்போவே இவ்ளோ சப்போர்டுஹ் வெளிய வந்தா என்ன பண்ண போறாளோ தெரில "என்க கேட்ட நவ்யாவின் இதழ்கள் புன்னகையில் விரிந்தது .
YOU ARE READING
கண்ணுக்குள்ளே உன்னை வைத்தேன் கண்ணம்மா (முடிவுற்றது)
General Fictionபாலையாய் இருந்த அவன் வாழ்வில் பாடுபெயலாய் அவள் வந்த கதை .மழையென வந்தவள் நதியென பாய்வாளா கானல் நீரென மறைவாளா சேர்ந்து பயணிப்போம் விடை அறிய