அவன் சுயநினைவை பெற்ற அடுத்த நொடி அவன் கண்முன்னே கடைசியாய் மமதியை அந்த விக்ராந்தின் பிடியில் பார்த்தது ஞாபகம் வர உடனடியாய் அந்த மருத்துவமனையை விட்டு வெளியேறியவன். மமதியை பற்றி விசாரிக்கத்துவங்கினான் .அவள் வீட்டிற்கு வந்தவன் கல்லின் பெல்லை அடித்துக்கொண்டே இருக்க கதவு திறக்கப்படவில்லை .என்ன ஆனதோ ஏதானதோ என்று பதறிக்கொண்டு வந்தவனிற்கு இது மேலும் பதற்றத்தை தர அவன் கல்லின் பெல் அடித்த சத்தத்தில் பக்கத்துக்கு வீட்டில் இருந்து வெளியே வந்த ஒரு நடுத்தர வயதை எட்டிய ஒருவர் "யார் நீ என்ன வேண்டும் ஆளில்லாத வீட்டில் என்ன செய்து கொண்டிருக்கிறாய் ?"என்று ஹிந்தியில் வினவ
அவனோ ஏனோ தன் அடையாளத்தை மறைக்க நினைத்தவன் "நான் மமதியின் தோழன் .பல வருடங்களுக்கு பின் இப்பொழுதே இந்தியாவிற்கு வந்திருக்கிறேன் மமதி எங்கே ?"என்று கேட்க அந்த நடுத்தர வயது நிரம்பிய பெண்மணியின் முகம் சோகத்தை பூசிக்கொள்ள மமதிக்கு நடந்த அநீதியை கூறி முடித்தார் அவர் .
அவரின் வாயால் அவளது கொடூர மரணம் பற்றி அறிந்த ஆதித்தனுக்கு ரத்த நாளங்கள் அனைத்தும் கொதித்தது தன் தோழிக்கு நிகழ்ந்த அநியாயத்தை நினைத்து . மமதி அவனிற்கு தோழி என்பதை விட அனைத்துமாய் இருந்தவள் அவள் .ஆதித்தன் தன் வீட்டை பிரிந்து குடும்பத்தை பிரிந்து இங்கு வந்து தங்கி தன் வேலையே தொடர அவன் தன் குடும்பத்தை மிஸ் செய்யாதவாறு அவனை எப்பொழுதும் கலகலப்பாக வைத்துக்கொள்பவள் மமதி.எந்த ஒரு பெரும் துயரையும் தன் சாந்தமான ஆறுதல் பேச்சால் தீர்த்துவிடுவாள்.ஆதித்தனிற்கு இங்கு வந்ததிலிருந்து ஹோட்டல் உணவு ஒத்துக்கொள்ளாமல் போக அவன் கேளாமல் தானே அவனிற்கு சேர்த்து சமைத்து கொண்டு வருவாள் .
அவ்வப்போது கையில் அடிபட்டு விட்டால் தயங்காமல் ஊட்டிவிடுவாள்.ஆணையும் பெண்ணையும் இணைத்து பார்த்தாலே அவர்கள் காதலர்கள் என்று தவறாய் பார்க்கும் சமூகத்தில் அவனுடன் இணைத்து அவளை பேச அவள் ஒரே வார்த்தையில் முடித்தால்" என் ஆதித்தனின் மேல் எனக்கு நம்பிக்கை உள்ளதென்று".தன்னை அத்தனை தூரம் நம்பிய ஒருவள் கடைசி நேரத்திலும் அம்மா என்று கதறாமல் ஆதி என்றல்லவா அலறினாள் தன்னை எப்படியாவது தன் நண்பன் காப்பாற்றி விடுவான் என்றல்லவா நினைத்தால் அவள் நம்பிக்கையை பொய்யாகி அந்த மிருகத்திடம் பலிகொடுத்து தான் மட்டும் உயிர் வாழ்கிறோமே என்ற நினைப்பே அவன் உள்ளத்தில் அமிலத்தை ஊற்ற மஹதியின் நிலையை நினைத்தவனிற்கோ உடலில் உள்ள அனைத்து செல்களும் ரத்தம் சிந்தியது .
YOU ARE READING
கண்ணுக்குள்ளே உன்னை வைத்தேன் கண்ணம்மா (முடிவுற்றது)
General Fictionபாலையாய் இருந்த அவன் வாழ்வில் பாடுபெயலாய் அவள் வந்த கதை .மழையென வந்தவள் நதியென பாய்வாளா கானல் நீரென மறைவாளா சேர்ந்து பயணிப்போம் விடை அறிய