14

3.5K 170 90
                                    

காலை சூரியன் விடிய ஒரு சிவன் கோவிலின் உள்ளே தர்ப்பணம் கொடுக்கும் இடத்திலிருந்த குளத்தில் மொன்று முறை முங்கி எழுந்து வந்து தனது தமக்கையின் படத்தின் முன் க்ரோதம் கக்கும் விழிகளோடு அமர்ந்தாள் மஹதி.

இன்று மமதியின் மூன்றாம் வருட திதி அவளின் புகைப்படத்திற்கு மாலை அணிவிக்கப்பட்டிருக்க மகதியின் நினைவுகளோ தன் தமக்கையுடனான தன் நாட்களை நினைவு கூர்ந்தது.

மமதி டெல்லியில் வளர்ந்த சென்னை வாசி .பிபிசியின் ரெசெர்ச் ஜௌர்னலிஸ்ட்டாக பணி ஆற்றிக்கொண்டிருந்தால் .மஹதிக்கும் மமதிக்கும் அன்னை தந்தையர் கிடையாது .கிடையாதென்றால் இறந்துவிடவில்லை பிரிந்து விட்டனர். அவர்களது அன்னையாரும் தந்தையாரும் வெவ்வேறு துணையை தேடிக்கொள்ள அனாதையாய் நின்றதென்னவோ ஒரு பாவமும் அறியாது அவர்களின் உறவிற்கு சாட்சியாய் பிறந்த இந்த தளிர்கள் தான் .

மமதி மகதியை விட 2 வயதே மூத்தவள் எனில் மஹ்தியின் அக்கா என்பதை விட மஹ்தியின் அன்னையாய் இருந்தால் மமதி .இருவரையும் அவர்களது அன்னை வழி பாட்டி வளர்க்க யாரிடமும் அதிகம் ஓட்டுதல் இல்லாத மஹதி அனுதினமும் ஒட்டிக்கொண்டலைவது மமதியின் பின் தான் .

உன்ன வேண்டுமென்றால் மமதி ஊட்டிவிட்டால் தான் உண்ணுவாள்,அவளது மடியில் தான் உறங்குவாள் ,அவள் சொல்லிக்கொடுத்தால் தான் பாடம் படிப்பாள் ,அவள் முகத்தில் முழித்த பின்பே தனது நாளையே தொடங்குவாள் இவள் இப்படி இருக்க மாமதிக்கோ மஹதி இன்றி ஒரு அணுவும் அசையாது மஹாதிக்கு ஊட்டிவிட்ட பின்பே தான் உண்ணுவாள்,அவளை கட்டிப்பிடித்து உறங்கவில்லை என்றால் மாமதிக்கு உறக்கமே வராது .வேண்டுமென்றே குறும்புகள் செய்து தன் பின்னே சுற்றிக்கொண்டு தனக்கு ஒரு தங்கை என்பதை விட ஒரு பாதுகாப்பு அரனாய் ஒரே தம்பியை போல் இருக்கும் தன் தங்கை என்றால் அவளிற்கு உயிரிற்கும் மேல்.

மமதியும் மகதியும் உடலால் ஈருடல் எனில் உயிரால் ஓருயிர் போன்றே ஒருவரை மற்றொருவர் பிரியாது வளர்ந்தனர் .மமதி இயற்கையிலேயே சிறுவயதில் இருந்து தன் தங்கையை தாயை போல் வளர்த்ததாலோ இல்லை பிறவி குணத்தாலோ மிகவும் சாந்தமான சுபாவத்தை உடையவள் .அவள் வதனத்தை பார்ப்பவருக்கே மனதில் ஒரு இனம் புரியாத அமைதி குடிகொள்ளும் அப்படி ஒரு சாந்தமான முகம்

கண்ணுக்குள்ளே உன்னை வைத்தேன் கண்ணம்மா (முடிவுற்றது)Where stories live. Discover now