8

3.4K 178 98
                                    

phoneai தூக்கி எறிந்துவிட்டு முழங்காலில் முகத்தை புதைத்து அழுதவள் எப்பொழுது உறங்கினால் என்று அவளே அறியாள்.தன் தலை முடியை யாரோ கோதுவதைப் போன்ற உணர்விலே தான் தன் கண்களை சிரமப்பட்டு பிரித்து எதிரிருந்த உருவத்தை பார்த்தால்.

அவள் கண்முன்னே அவளது ஆருயிர்த் தோழி நவ்யா அமர்ந்து அவளை நோக்கி அன்றலர்ந்த மலரைப் போல் புன்னகைத்துக் கொண்டிருந்தாள் .என்றுமே நாம் எத்தனை துயரில் இருந்தாலும் குழப்பத்தில் இருந்தாலும் நமக்கு நெருக்கமானவர்கள் ,நமது நண்பர்களின் முகத்தில் தோன்றும் ஒரு புன்னகையே நம் மனதின் ரணத்தை குறைக்கும் பெரும் சக்தியை பெற்றிருக்கும் .

ஸ்வஸ்திகாவிற்கும் அதே போல் காலையில் தனது தோழியின் சிரித்த முகம் தனது கவலைகளை ஏதோ ஒரு வகையில் குறைப்பதாக உணர்ந்தாள் .பதிலிற்கு சிறிதாய் புன்னகைத்தவள் "என்னடி காலங்காத்தால வந்துருக்க "என்று எழுந்து அமர

அவளோ அவளை ஒரு முறை முறைத்தவள் கைக்கடிகாரத்தை கண் காட்ட அதுவோ மதியம் 2 மணி என காட்டியது .மிகவும் தாமதமாக தூங்கியதால் இத்தனை நேரம் உறங்கியிருக்கிறோம் என்பதை உணர்ந்தவள் சோர்ந்த முகத்துடன் "லேட்டாக தூங்குனேன் டி அதான் இவ்ளோ நேரம் ஆயிருச்சு "என்றவள் அவள் கண்ணைப் பார்க்காமல் குளிக்க செல்ல

நவ்யாஅவள் கையை பிடித்தவள் "என்னாச்சுடி முகம்லாம் ஒரு மாறி இருக்கு "என்க

அவளோ "அது அதெல்லாம் ஒண்ணுமில்லடி நைட் fullaah படுச்சேன் அவ்ளோ தான் "என்று கூற தன் தோழி தன்னிடம் பொய் உரைப்பது தெளிவாக புரிந்தாலும் அவளே கூற விரும்பாத ஒன்றை தோண்டி துருவி கேட்க அவளிற்கு மனமில்லை எனவே அவளே தன்னிடம் பகிர நினைக்கையில் பகிர்ந்து கொள்ளட்டும் என்று அவளை குளிக்க அனுப்பி வைத்தால் .ஸ்வஸ்திகாவிற்குமே தனிமை தேவைப் பட்டது .

அவள் குளியலறைக்குள் வந்து நின்றபோதும் சரண் அவளை பார்த்து

கூறிய வார்த்தைகளே காதில் ரீங்காரமிட்டுக் கொண்டிருந்தது "chi நீலாம் ஒரு பொண்ணாடி." "இப்டி தான் எவன் கூப்பிட்டாலும் போய்டுவியா" "chi உன்ன எல்லாம் cousinnu சொல்லிக்கவே அவமானமா இருக்கு " என்று அவனது ஒவ்வொரு ஏச்சுக்களும் நினைவிற்கு வர தண்ணீரோடு கணக்கில்லாமல் கன்னத்தில் வழிந்த கண்ணீரையும் கரைத்தால் .

கண்ணுக்குள்ளே உன்னை வைத்தேன் கண்ணம்மா (முடிவுற்றது)Where stories live. Discover now