ஆஸ்பிட்டல்ல இருந்து சக்தி குழந்தையை தூக்கிக்கொண்டு வந்தாள் வாசலில் நர்மதா ஆரத்தி எடுத்தாள் . "வாங்க அண்ணி உள்ள என்று அழைத்தாள்.அவளை அமரவைத்து காப்பி கொடுக்க அவளோ அதை வாங்கி பருகியபடி அனைவரிடம் நலம் விசாரித்து கொண்டிருந்தாள் இதற்கிடையில் கதிர்வேலன் தங்கச்சி (முருகேஷ் க்கு வீராவுக்கு அத்தை) வந்து இறங்க ..வாங்க அத்தை என்று அவரை அழைத்து உள்ள அமரவைத்தனர்...
"என்னத்தா நர்மதா கல்யாணம் முன்னாடியே புள்ளைய வாங்கிட்ட ம்ம்ம் என்னவோ போ...எப்படியோ கல்யாணம் பன்னிட்டு சந்தோஷமா இருங்க என்று சலித்து கொள்ள நர்மதாவுக்கு முகம் வாடி விட்டது ஓவென அழத்துவங்கினாள் அதுவும் நவின் அறைக்கு சென்று . அங்கு பின்னாடியே நவின் சென்றான்.
"எ...ஏய் நர்மதா இங்க பாரு அழாத அவங்க பெரியவங்க ஏதோ சொல்லிட்டாங்க அதுக்காக அழக்கூடாது கண்ணை துடை வா கீழ போலாம்...என்னால முடியாது ...என்னை மட்டம் தட்டுற மாதிரி கேவலமா பேசிட்டாங்க எனக்கு அவமானமா இருக்கு நான் வரலை போ நவின்.
இங்க பாருடா நர்மதா பெரியவர்கள் அப்படிதான் அதுக்காக இப்படி அழுதுட்டு இருந்தா அது இன்னும் நம்ப வீக்னஸ் ஆயிடும் கண்ணை துடை என் செல்லம் ல வா கீழ போலாம் என்று அவளை சமாதானம் செய்வதை தூரத்தில் இருந்து பார்த்தாள் வீரா "நர்மதா நீ கொடுத்து வச்சவ இந்த மாதிரி புருஷன் கிடைக்க "😊என்று புன்னகையித்து செல்ல எதிரே தனுஷ் நின்றான் வழி மறித்தபடி "வழி விடுங்க என்றாள் வீரா ...ஆனால் வழி மறித்தபடி நிற்க அவரின் தோளை மெல்ல தள்ளியபடி நகர வைத்து நடந்தாள் அவளின் கைகளை பற்றி இழுத்தான் தனுஷ் அவனின் தொடுதலில் உண்மையான கணவன் மனைவி மீது வைக்கும் அன்பினை உணர்ந்தாள். திரும்பி தனுஷை பார்த்தவாறு "என்னங்க உங்களுக்கு பழைய ஞாபகம் வராட்டியும் பரவாயில்லை உங்களோட நான் வாழ தயாரா இருக்கேன் என்று முழுமனதோடு கூற அவனோ கண்ணடித்து "ஏய் பொண்டாட்டி இந்த ரவுடி பேபி மேல அவ்வளவு லவ்வா "என்று கேற்க ஆச்சரியத்தில் மெய்மறந்தாள் "உ....உங்களுக்கு ஞாபகம் வந்துடுச்சா????
YOU ARE READING
லவ் குரு (முடிவுற்றது)
Romanceகாதல் பற்றி எவ்வளோ வோ கதையில் படிச்சிருப்போம் ஆனால் இது வித்தியாசமான காதல் கதை. சூழ்நிலை கணவன் மனைவி ஆக்கிவிட்ட நிலையில்..... இருவரும் அந்த வேண்டா வெறுப்பு வாழ்க்கை வாழமுற்படும்போது. அந்த வாழ்க்கை இனிக்கிறதா இல்லை யா??☺️என்பதே கதை.