பாகம் -48

949 41 13
                                    

அன்று அகல்யா வை அழைத்துக்கொண்டு சென்னை வந்தான் தன் அத்தை வீரா வீட்டுக்கு . "அத்தை யார் வந்துருக்கா பாருங்க... தன் மகளை கண்டவுடன் "அகல்யா ஏன் செல்லம் சொல்லாம போன நீ இல்லாமல் எவ்வளவு அழுதன் தெரியுமா...."ஆனால் உன்னை விட நான் ரொம்ப அழுதன் மா என்று அவள் கூறுவதன் அர்த்தம் வீராவுக்கு புரியவில்லை.

"ஏன் அகல்யா உனக்கு அரசனை ரொம்ப பிடிக்குமா அவனை பார்க்கவா சொல்லாம கொள்ளாமல் போன.
"இல்லை மா அது வந்து அவனை பிடிக்கும் ஆனால் அதை உங்கள் எல்லாருக்கும் எப்படி புரியவைக்கிறது தெரியலை இனி நீங்க புரிஞ்சிக்கவும் வேணாம். இவ்வளவு ஏன் எனக்கு கல்யாணம் வேணாம் நான் இப்படியே இருந்துப்பன் சந்தோஷமா உங்கள் கூடவே.

எ...என்னடி இப்படி எல்லாம் பேசுற நீ சொல்றது கேட்டா எனக்கு கஷ்டமா இருக்கு நான் வேணும் னா சக்தி அண்ணிகிட்ட பேசுறன் உனக்கும் அரசனுக்கு கல்யாணம் பன்னி வைக்கிறன் என்ன டா அரசன் நீ என்ன முடிவு எடுத்துருக்க.???

அத்தை எந்த முடிவும் இல்லை இப்போதைக்கு ஓகேவா நான் அகல்யா வை விட்டு போகதான் வந்தேன். ஆமாம் ஏன் இப்படி சொந்தத்துல கல்யாணம் பன்னனும் னு எல்லாரும் துடிக்கிறிங்க ஊர் உலகில் மாப்பிள்ளை இல்லாத மாதிரி இந்த விஷயம் தான் எனக்கு புரியல.

டேய் அரசா அந்த காலத்துல உங்க அம்மா சக்தியும் உன் மாமா நவினும் தனியாக வாழ்ந்தாங்க ஆதரவு இல்லாமல் ,என் அண்ணன் முருகேஷ் கட்டிட்டு தான் அவங்களுக்கு வாழ்க்கை னு ஒன்று கிடைச்சது. உன் மாமி நர்மதா ஒரு அநாதை ஆஷ்ரமம் ல வளந்தவங்க...இப்படி ஆதரவு இல்லாது வாழ்ந்த எங்களுக்கு தான் டா சொந்தமோட அருமை புரியும். இனிமேலாவது சொந்தம் தழைக்கனும் ஒன்னுக்கொன்னு இருக்கனும் னு தான் உனக்கு அநன்யா வை கட்டி வைக்க ஆசைபடுறோம் ஆனால் அகல்யாக்கு இதே ஆசை தான் இருக்குனு நினைக்கிறப்ப என்ன பன்றது தெரியல.

அத்தை நீங்க சொல்றது வாஸ்தவம் தான் ஆனால் என்னை பற்றி யோசிச்சிங்க???நான் இவளா அவளா னு ஆப்ஷன் வச்சு கேம் விளையாடுற மாதிரி இருக்கு. என்னால இந்த மாதிரி யோசிக்க முடில நான் வெளில இருந்து பொன்னு கட்டிக்கிறன் எனக்கு இரண்டு பேருமே வேணாம் . நான் கிளம்புறன்.

🌸🌸🌸🌸🌸🌸🌸
இரண்டு நாள் கழிந்தது.
சத்யா வீட்டில் இருந்து தட்டு தாம்பளத்துடன் வந்தனர் "வீரா வீரா என்று அழைக்கப்படும் சத்தம் கேற்க "ஹாய் சத்யா என்னடி தாம்பளம் எல்லாம்...

இன்னைக்கு நாள் நல்லாருக்கு வீரா அதான் சதிஷ் - அகல்யா க்கு ஒப்புதாம்பலம் பன்னிக்கலாம் நீ போய் தனுஷ் அண்ணன் கூட்டு வா ...எல்லாம் தெளிவாக பேசிக்கலாம்.அகல்யா இதைகண்டு தன் அறைக்கு சென்று தாளிட்டு அழத்துவங்கினாள். தனது மனசங்கடம் தீரும் வரை அழுதாள் அழுகையை துடைத்து கொண்டு சதிஷ் க்கு போன் செய்தாள் "ச..சதிஷ் நான் அகல்யா...

தெரியும் டார்லிங்😊என்ன எங்க அப்பா அம்மா அங்க வந்துருக்காங்களா??😊சூப்பர் .உனக்கு ஓகே தானே அகல் ??☺️

அதை சொல்ல தான் போன் பன்னேன் எனக்கு ஓகே மனபூர்வமா ஒத்துக்குறன் . நீ என்னை நல்லா பாத்துபியா சதிஷ் என்று பரிதாபமாக கேற்க "ஹாஹா இல்லை டார்லிங் அம்போனு விட்டுருவேன்😂😂😂😂கேள்வியை பாரு எருமைக்கு . ஹாஹா நல்லா பாத்துப்பேன் ஓகே...போ போய் ரெடி ஆகி புடவை எல்லாம் கட்டி போட்டோ எடுத்து வாட்ஸ்அப் பன்னு 😊

ம்ம்ம்... போனை வைத்து மீண்டும் இரண்டு துளி கண்ணீர் கதவை தட்டினாள் வீரா "அகல் மா தட்டு மாத்திக்கவா??? நீ சொல்ற முடிவு என்ன???சதிஷ் மிஸ் பன்றதும் ஏத்துகுறதும் உன் விருப்பம் . அரசனை நம்பி சதிஷ் கைவிட்டுறதா டா புரிஞ்சிக்க.

சரிங்க மா...தட்டு மாத்திக்கோங்க என்று அவள் அனுமதி சொல்லவே வீரா சந்தோஷத்தில் மிதந்தாள்.

தொடரும்.

லவ் குரு (முடிவுற்றது)Where stories live. Discover now