பகுதி -28

1.6K 49 10
                                    

விரைந்து மண்டபம் வந்து சேர்ந்தனர் கிடு கிடு வென வீராவின் அறைகதவை தட்டினர் கதவை திறந்த வீராவுக்கு அதிர்ச்சி "என்ன இது நம்ப கொடைக்கானல் பஸ்ஸில் பக்கத்தில் அமர்ந்த ஆளு இவரு...இவரு ஏன் என் மாமியார் மாமனார் கூட வரனும்"

நீ...நீங்க யார் ஏன் எங்க மாமியார் மாமனாரோட வந்துருக்கிங்க என்று அவள் சொல்லி முடிபதற்குள் "அம்மாடி இவன் தான் மா உன் தனுஷ்...என் புள்ள மா"

அத்தை என்ன சொல்றீங்க இவரு என் புருஷனா அத்தை இவன் யாருன்னு எனக்கு தெரியாது தனுஷ் எப்படி இருப்பாரு எனக்கு தெரியாத அவரு முகம் கூடவா தெரியாது. என்ன பேசுறீங்க நீங்கலாம்.

அ...வீரா நான் தான் உன் புருஷன்னு அம்மா சொல்லி தான் எனக்கு தெரியும் ஏனெனில் பழசு எல்லாம் மறந்துடுச்சு முகமும் ப்ளாஸ்டிக் சர்ஜரி பன்னி அதான் இந்த கன்ப்யூஸன் ...

மெளனமானாள் வீரா...அறைக்கதவை தாளிட்டு அழத்துவங்கினாள் எல்லாரும் கதவை தட்டி வெளியே வா வீரா என்று கதறினர்...."ஐயோ கடவுளே என் வாழ்க்கை இப்படி ஆயிடுச்சு... புருஷன்னு ஒருத்தர் வந்து நிக்க இன்னொரு பக்கம் என் நவின் நான் என்ன பன்னுவேன் என்று கதறினாள்.

நவின் - வீரா ஒரு நிமிஷம் கதவை திற உன்கிட்ட கொஞ்சம் பேசனும்
கதவை திறந்தாள் உள்ளே சென்ற நவின் முதலில் அவள் கண்ணீரை துடைத்தான் "ரிலாக்ஸ் வீரா உன் நிலமை எனக்கு புரியுது இங்க பாரு என்ன பத்தி கவலை படாத உன் முடிவு என்ன னு மட்டும் சொல்லு பெரியவங்க கிட்ட புரியுதா வா வெளியே வா....."

டேய் நவின் எனக்கு இதெல்லாம் வேணாம் டா...நான் உன்கூட வாழனும் அதுமட்டும் போதும் ப்ளீஸ் என்னை எடுத்துக்கோ ..ப்ளீஸ் ...என்று அழதுவங்கினாள்... அவளை சமாதானம் செய்து வெளியே அழைத்து வந்தான்.
"மிஸ்டர் தனுஷ் ...நீங்க வெற்றியா திரும்பி வந்துருக்கிங்க உங்க வீராவை உங்க கிட்ட ஒப்படைக்கிறன். இதோ இப்பவே இவ கழுத்துல நீங்க தாலியை கட்டி விடுங்கள் என்று நவின் கூற அனைவரும் சம்மதித்தனர் ஆனால் வீராவுக்கு வெறுப்பு மட்டுமே இருந்தது.
தன் கண் முன்னே கணவன் மலையிலிருந்து தவறி விழுந்தான் இந்த. நிலையில் எப்படி மீண்டு வர முடியும் எல்லாம் கட்டுகதை இவன் யாரோ என்ற தோரணையில் நின்றிருந்தாள் இவள் கழுத்தில் தனுஷ் தாலியை கட்டினான். கண்சிமிட்டும் நேரத்தில் எல்லாம் நடந்து முடிந்தது.

லவ் குரு (முடிவுற்றது)Waar verhalen tot leven komen. Ontdek het nu