மூவருமாக ஊருக்கு கிளம்பி வந்தடைந்தனர்...வீட்டில் இருந்த சக்தி பதறியபடியே என்ன ஆச்சு என்ன ஆச்சு யாராவது சொல்லுங்கள் என்று கண்ணீர் மல்க கேற்க "அண்ணி.......என் வாழ்க்கை போச்சு அண்ணி ....த...தனுஷ் தவறிட்டாரு "னு கதறி அழுதாள் . துர்க்கம் தாளாமல் தன் அண்ணியை கட்டி அணைத்து அழுதாள். அவளது அண்ணிக்கோ துர்கத்தில் கண்ணீர் கூட வரவில்லை அந்த அளவு மனசு ரணமாகியது. அவளுக்கு சமாதானம் சொல்ல அவளிடம் வார்த்தை இல்லை, இதே துர்க்கம் தான் ஒரு காலத்துல தானும் அனுபவித்தாள்.
சற்று நினைவு வந்தபடி "வீரா...வீரா அழாத மா....நாங்க எல்லாம் இருக்கோம் இங்க பாரு அண்ணி சொல்றதை கேளு வா உள்ள போலாம். என்று அவளை அழைத்து அமரவைத்தாள்...பின்பு அவளரியாமல் வலது கண்ணில் இருதுளி கண்ணீர் வந்து விழுந்தது. இது தான் துர்கத்தின் உட்சக்கட்டம். சில நேரங்களில் அதிக துயரம் அடையும் போது கண் கலங்காது மனசு ஆழமாக கலங்கிவிடும் . இதுவே நம் சக்திக்கும் ,மனம் கலங்கிவிட்டாள் ஆனால் கண்கள் அந்த அளவு கண்ணீர் சிந்த மறுத்தது.
சொந்தங்கள் அனைவரும் சூழ எழவு பாட்டு பாடியபடி அவன் (தனுஷ்) புகைப்படம் க்கு பூக்கள் தூவி அனைவரும் துர்க்கம் அனுசரித்து 16 நாள் காரியம்...அன்று சடங்கு என்ற பெயரில் வீராவை அமர வைத்தனர்.....அப்போது பிரளையமே வெடித்தது...
"என்ன பன்றீங்க ம்ம்ம்... வயிறு புள்ளதார்ச்சி பொன்னை இப்படி கஷ்டபடுத்துரிங்க....சின்ன பொன்னு அவ பாவம்...விடுங்க என்று கத்தி ஆர்ப்பாட்டம் பன்னாள் அண்ணி சக்தி...
ஏய் சக்தி நீ என்ன சும்மா இதுகெல்லாமா கத்துவ என்றாள் ஒரு விதவை கிழவி .
பாட்டி...... அந்த காலத்துல உனக்கு இந்த சடங்கு பன்றப்போ மனசு கலங்கல ????50 வயசு ல புருஷனை இழந்த உனக்கே இன்னைக்கு வரைக்கும் அம்புட்டு துர்க்கம் இருக்கிறப்ப 20 வயசு பொன்னு அவ...அவளை போய் இப்படி சடங்கு அது இதுனு...ச்ச...போங்க எல்லாரும்.
வீரா அருகில் சக்தி சென்றாள் "தாயி...இந்த சடங்கு எல்லாம் உனக்கு வேண்டாம் .....இங்க பாரு அந்த தாலியை கழட்டி கோவில் உண்டியலில் போட்டுரலாம் மற்ற படி எந்த சடங்குகள் வேணாம்...நீ எழுந்துரு தண்ணி குடி .....தன் அண்ணியின் செல்ல மகளானாள் வீரா.
CITEȘTI
லவ் குரு (முடிவுற்றது)
Dragosteகாதல் பற்றி எவ்வளோ வோ கதையில் படிச்சிருப்போம் ஆனால் இது வித்தியாசமான காதல் கதை. சூழ்நிலை கணவன் மனைவி ஆக்கிவிட்ட நிலையில்..... இருவரும் அந்த வேண்டா வெறுப்பு வாழ்க்கை வாழமுற்படும்போது. அந்த வாழ்க்கை இனிக்கிறதா இல்லை யா??☺️என்பதே கதை.