பகுதி -21

1.5K 52 6
                                    

வீரா திடிரென்று அன்று துணிமணிகள் அடிக்கி கொண்டிருப்பதை தந்தை கதிர்வேலன் பார்க்க "அப்பா நான் என்னோட மாமியார் மாமனார் வீட்டுக்கு போய் இரண்டு நாள் தங்கிட்டு வரேன் பா..பாவம் பேத்தியை பார்க்க அவங்களுக்கும் ஆசை இருக்கும் என் குழந்தை யை அவங்கள்ட காட்டிட்டு வரேன் பா "என்று அவள் சொல்லி முடித்தவுடன் தலையசைத்து சரி என்றார் கதிர்வேலன்.
😊😊😊😊😊😊

அந்த ஆஷ்ரமத்தில் அன்று குழந்தைகள் தின விழா அதில் கலந்து கொள்ள நவின் சென்றான் . அழகாக அந்த குழந்தைகள் ஆடைகளை உடுத்தி நடனமாடி கொண்டாடுவதை தானும் கண்டு மகிழ்ந்தான் . அப்போது அங்கு நர்மதா பாட்டு பாடினாள்...

"காலங்கள் மாற நம் வாழ்க்கை யும் மாறும்....
அன்பு பாசம் இருக்க எல்லாம் உறவாகும் "என்று தான் எழுதிய வரியை பாடலாக பாட அனைவரும் கைதட்டி பாராட்டினர். நவின் அவளருகே சென்றான்

"நர்மதா....உங்க கிட்ட ஒன்று சொல்லனும்.... என்று அவன் ஆரம்பிக்கும் போதே தன் உள்ளாடை தெரிகிறதா என்று ஓரக்கண்ணால் பார்க்க நவின் விழுந்து விழுந்து சிரித்தான்..."ஹலோ மேடம் நான் பேசினாலே அதை தான் சொல்ல போறேனு ஏன் நினைக்கிறிங்க ம்ம்ம்...

ஹாஹா.....இல்லை அன்னைக்கும் இதே மாடுலேஷன் அதான்.
சரி நீங்க என்ன சொல்ல வந்திங்க??☺️

ஒன்னுல உங்க வாய்ஸ் சூப்பர் அதைவிட லிரிக்ஸ் சூப்பர். என்றவுடன் வெட்கத்தில் தலைகுனிந்து நிற்க. சிறிது நேரத்தில் உணவு பரிமாறபட்டது
சாப்பிட்டவாறே நவின் அவளிடம் பேசினான் "ஆமா நர்மதா சின்ன வயசுல இருந்தே இந்த ஆஷ்ரமம் ல தான் வளர்ந்தீங்களா???😊

ம்ம்ம் ஆமா....அம்மா இறந்துட்டாங்க அப்பா இன்னொரு கல்யாணம் பன்னிட்டாரு வந்த சித்தி என்னை சரியா கவனிக்கல அதான் இங்க வந்து சேர்த்துட்டாங்க....வேற எதும் பெருசா என்னை பத்தி சொல்ல எதுவுமில்லை.. உங்களை பத்தி தெரிஞ்சிக்கலாமா நவின்.

ம்ம்ம் எனக்கு அப்பா அம்மா இருவரும் இறந்துட்டாங்க என்னை வளர்த்தது அக்கா...இப்ப அவளுக்கு ஒரு நல்ல வாழ்க்கை அமைஞ்சிருக்கு. ம்ம்ம் அப்புறம் நான் ஒரு ப்ரைவேட் கன்சர்ன் ல வேலை பாக்குறன்....

லவ் குரு (முடிவுற்றது)Donde viven las historias. Descúbrelo ahora