பகுதி -39

1.3K 42 6
                                    

அவன் மதியம் வந்த அதே காபி ஷாப்பிற்கு வீரா வந்து காத்துக்கொண்டு இருந்தாள். இங்க தானே வர சொன்னான் நேரம் ஆச்சே இன்னும் காணுமே ஏன் இவ்வளவு தாமதம் என்று தனக்கு தானே கூறிக்கொண்டு கையில் ஒரு காபியுடன் அமர்ந்திருந்தாள்.

"அச்சோ நல்லா ட்ராபிக் ல மாட்டிக்கிட்டன், அவ வேற வெயிட் பன்னிட்டு இருப்பாளே என்ன பன்றது ஈவ்னிங் 8 மணிக்கு ப்ளைட் என்ன செய்றது என்று யோசித்தவாறு பயணம் செய்ய அந்த காபி ஷாப்ல உள்ள வரப்ப மணி 7.அவளை பார்த்தவுடன் "சாரி வீரா....வர லேட் ஆயிடுச்சு என்று அவளை உலுக்க அவளோ தப்பென்று சுயநினைவில் இல்லாமல் விழ..."ஹே வீரா வீரா...என்ன ஆச்சு அய்யோ என்று பதறியபடியே அவளை அழைத்து மருத்துவமனைக்கு செல்ல அவளை பரிசோதித்த மருத்துவர் அவள் இதயத்தை அந்த  இஸிஜி கருவி மூலம் அழுத்த அழுத்த..."ஆ....ம் னு சட்டுனு அவளுக்கு மூச்சு வந்தது.டாக்டர் வெளியே வந்து "மிஸ்டர் ஷி இஸ் சப்பரிங் ப்ரம் சம் ஹார்ட் ப்ராப்லம்ஸ் ஸோ ஐ நீட் டு செக் ஹர் ஃபுல்லி ..நவ் ஷி இஸ் ஓகே ....யூ ஜஸ்ட் பே த பில் .

கையில் இருந்த பணத்தையும் அவன் கழுத்தில் இருந்த செயினையும் வைத்து பில் கட்டினான். அவளுக்கு ஹாஸ்பிட்டல் உடை அணிவித்து அவளை டெஸ்ட் எடுக்க உள்ளே கூட்டி செல்ல இடது புரம் நின்றிருந்த தன் நண்பன் நவினின் கரங்களை பிடித்தவள் "எனக்கு பயமா இருக்கு டா என்று மெல்லிய குரலில் சொல்ல அவனுக்கு என்ன சொல்வது என்று தெரியவில்லை .தனுஷ்க்கு போன் செய்தான் "தனுஷ் ப்ரோ ...இங்க உங்க மனைவிக்கு இதய நோய் ஏதோ இருக்கிறதா சொல்றாங்க எனக்கு பயமா இருக்கு நானும் இந்தியா கிளம்பனும் . இன்னைக்கு ப்ளைட் ஏற்கனவே மிஸ் ஆயிடுச்சு ஆனால் நாளைக்கு நான் இந்தியா வந்திடுவேன்...நான் வேணும்னா வீராவை அழைச்சிட்டு வந்துடவா நம்ப ஊர்ல ஆஸ்பத்திரில பார்த்துக்கலாமா இல்லை நீங்க கிளம்பி மலேசியா வரிங்களா.??

ந...நவின் என்ன திடிருனு நல்லா தானே இருந்தா???நவின் நீங்க நாளைக்கு அவளை இங்கே கூட்டு வாங்க நான் இங்கேயே பாத்துகிறன் .

லவ் குரு (முடிவுற்றது)Hikayelerin yaşadığı yer. Şimdi keşfedin