டிவோர்ஸ் ஆகபோவதை நவினால் பொறுக்க முடியவில்லை மாதங்கள் கழிந்தன நாளை டிவோர்ஸ் கேஸ் பற்றிய முடிவு கோர்ட்டில் சொல்லப்படுகிறது இதுக்கு தனுஷ் மற்றும் வீரா ஒத்துழைப்பு தருவார்களா என்ன என்று தெரியாது. ஆனால் இவர்கள் இருவரும் ஒன்று சேரவேண்டும் என்பதே நவினின் ஆசை. தனுஷை சந்திக்க சென்றான்.
"மிஸ்டர் தனுஷ்....
நீ...நவின் தானே நம்ப வீரா க்ளாஸ் மேட்.
ஆமா....
சொல்லு என்ன விஷயம்??
நாளைக்கு தீர்ப்பு கோர்ட்டில் அதான் நீங்க சொல்ற பதில் வச்சு தான் இருக்கிறது. அப்புறம் இன்னொரு விஷயம் நீங்க பார்த்த அந்த ஆபாசம் படம் மார்ப்பிங் செய்யபட்ட ஒரு போலியான படம் இந்த வேலையை பன்னது சத்யா வின் அண்ணா.... ஒரு வாட்டி வீராவை அவன் கிண்டல் பன்னபோ வீரா அவனை எல்லார் முன்னாடியும் செருப்பை கழட்டி அடிச்சிருக்கா அந்த கோபத்துல அப்படி பன்னிருக்கான், மற்றபடி வீரா உத்தமி .ப்ளீஸ் தனுஷ் அவளை ஒதுக்கிடாதிங்க.
ஹாஹா நீ சொல்ற எல்லா விஷயமும் எனக்கு தெரியும்.. நானே கண்டு பிடிச்சு தெரிஞ்சிக்கிட்டன். இம்புட்டு நாளு இதெல்லாம் தெரியாமலேயே இருந்துருப்பேனா....?? என் வீரா உத்தமி னு எனக்கு தெரியும்.
அப்புறம் ஏன் தனுஷ் அவளை டிவோர்ஸ் பன்னனும் நீங்க.?இந்த கேள்விக்கு அவன் மெளனமானான் ....சற்று சுதாரித்து சொல்ல முற்பட்டான் "நவின் உண்மையை சொல்லனும் னா எனக்கு வீராவை ரொம்ப பிடிக்கும் ஆனால் ஆரம்பத்தில் அவளுக்கு தான் என்னை பிடிக்கவே பிடிக்காது. அப்புறம் என் மேல நல்ல அபிப்பிராயம் வந்துருகாகலாம் ஆனால் ...
ஆனால்....?? என்ன?
நான் அவக்கூட சேர்ந்து வாழனும் னு ஆசைப்பட்டேன் ....சீக்கிரம் அவள் என்னை ஏத்துப்பா நாங்க இரண்டு பேரும் சேர்ந்து வாழுவோம் னு ஆசைப்பட்டேன் . நான் ஆசைப்பட்ட அந்த வாழ்க்கை என்னால வாழ முடியாது னு புரிஞ்சிக்கிட்டன்.
எ....என்ன சொல்றீங்க???
ம்ம்ம்.... எனக்கு h i v positive 😪 ஆனால் நீங்க நினைக்கிற மாதிரி தப்பான தொடர்பு எனக்கு எதுவும் கிடையாது ..சத்யமா கிடையாது ...ஆனால் அன்னைக்கு ரோட்டில் அடிபட்டு ப்ளட் ட்ரான்ஸ்வர் நடந்தது எனக்கு ....இது நடந்து ஒரு வருஷம் இருக்கும் அப்போ..எச்.ஐ.வி ப்ளட் ஏத்திட்டாங்க போல.....அ....அது ....கொஞ்ச மாசமா தான் எனக்கே தெரியும். நானே அவளை விட்டு விலகிடனும் னு நினைச்சன் ஆனால் எனக்கு என்ன காரணம் சொல்லி விலகுறது தெரியல அதான் அதுக்கு தகுந்தாற்போல் அந்த ஆபாசபடம் மாட்டுச்சு ...அதை காரணம் காட்டி அவளை விட்டு விலகிடனும் னு முடிவு பன்னேன். உனக்கு ஒன்னு தெரியுமா நவின்...அவளோட அப்பா எங்க பரம்பரை சொத்தை எங்க அப்பா கிட்ட இருந்து புடுங்குனதை மீட்டு கொடுக்க தான் ஆரம்பத்துல வீராவை காதலிச்சன்...நாளடைவுல வீரா என் மனசுல இடம் பிடிச்சா.......இப்போ அவளை விட்டு நான் விலக போற சூழ்நிலை...... மியுச்சுவல் டிவோர்ஸ் அப்படிங்கறது னால பிரச்சினை இல்லை கண்டிப்பாக டிவோர்ஸ் கிடைக்கும்.
VOCÊ ESTÁ LENDO
லவ் குரு (முடிவுற்றது)
Romanceகாதல் பற்றி எவ்வளோ வோ கதையில் படிச்சிருப்போம் ஆனால் இது வித்தியாசமான காதல் கதை. சூழ்நிலை கணவன் மனைவி ஆக்கிவிட்ட நிலையில்..... இருவரும் அந்த வேண்டா வெறுப்பு வாழ்க்கை வாழமுற்படும்போது. அந்த வாழ்க்கை இனிக்கிறதா இல்லை யா??☺️என்பதே கதை.