அகல்யா - உன்னை பத்தி புரிஞ்சு வச்சது ரொம்ப கம்மி தான் சின்னவயசுல உங்க பேரண்ட்ஸ் கூட வீட்டுக்கு வருவ ,காலேஜ் ல எனக்கு ஜூனியர் அப்படிங்கிறதுனால என்னால உன் கூட பேச நேரம் இருக்காது..ஆனால் இன்னைக்கு ஒரே நாள்ல எல்லாமே புரியுது "நீ என்மேல அவ்வளவு லவ் வச்சிருக்க புரியுது"அப்புறம் உன்கிட்ட இன்னொரு விஷயம் சொல்லனும் டா.
என்ன??😊
அது வந்து போன வாரத்தில் தான் எனக்கு வாழ்க்கை ல ஒரு அசாம்பாவிதம் நடந்தது .என்னை ஒருத்தன் சீரழிச்சிட்டான். இதை உன்கிட்ட நான் மறைக்க விரும்பல .அதான் சொல்லிட்டேன். சாரி சதிஷ் இதுக்கு மேலயும் நீ என்னை கல்யாணம் பன்றதும் பன்னாததும் உன்னுடைய விருப்பம்.
ம்ம்ம் இன்னும் வேற எதாவது இருக்கா சொல்ல??😊
எ...என்ன சதிஷ் இவ்வளவு தானா உன் ரியாக்ஷன்???? நான் இவ்வளவு பெரிய விஷயம் சொல்றன் உன்பதில் எதுவும் பெருசா இல்லையே !!!!!!!!இவ்வளவு நார்மலா ரியாக்ட் பன்ற???
ரியாக்ட் பன்னனும்னா அதுக்கு நான் அரசன் கிட்ட பேசுறப்ப ரியாக்ட் பன்னதை உன்கிட்ட இப்ப ரியாக்ட் பன்னி காட்டவா ??ம்ம் "அ...அரசன் என்ன சொல்றீங்க என் அகல் விஷயத்துல நான் என்னைக்கும் சந்தேகம் படமாட்டேன் . இங்க பாருங்க அரசன் ஏதோ ஒரு நாய் கடிச்சதுக்கு பாவம் அகல்யா என்ன பன்னுவா???அவளை நான் கைவிடவும் மாட்டேன் குத்தி காட்டவும் மாட்டேன் ஓகேவா "
ம்ம்ம் இது தான் என்னுடைய ரியாக்ஷன் சரியா ? இப்ப சொல்லு டார்லிங் . நான் எந்த வகையிலும் உன்னை ஹர்ட் பன்னனும் நினைக்கல ஹர்ட் பன்னவும் மாட்டேன் அதான் அவன் யாரு என்னனு கூட உன்கிட்ட நான் கேக்கல....இதை நீ எல்லாத்தையும் மறக்கனும் மறந்தா மட்டும் தான் உன்னால இந்த அழகான வாழ்க்கை யை வாழமுடியும்.எதையோ யோசித்து விட்டு அவன் தோளில் சாய்ந்தாள் கடல்அலையின் ஓசை அவளுக்கு இசையானது அந்த இசையே அவளது காதலின் மொழியானது. எல்லா பாரமும் இறங்கிவிட்டது என்ற ஓர் உணர்வு . சதிஷ் மீது காதலும் அரசன் மீது உள்ள மரியாதையும் அதிகமானது. இந்த தருணத்தில் எதைவேணாலும் தான் சாதித்து விடலாம் என்ற ஒர் தைரியம் அவளுக்குள் ஏற்பட்டது.
இந்த அழகான வாழ்க்கை நீடிக்குமா?? நீடிக்கும் ஆனால் இந்த விஷயம் சத்யா மற்றும் தயாளனுக்கு தெரியவந்தால் என்ன ஆகும் தெரியாது அதை எதிர்த்து சதிஷ் போராடுவானா என்பதும் தெரியாது சூழ்நிலை தான் பதில் சொல்ல வேண்டும்.
🌼🌼🌼🌼🌼🌼🌼🌼🌼
அரசன் மீண்டும் டெல்லி சென்றுவிட்டான் ஒரு எட்டு அநன்யாவை பார்க்க முடியவில்லை என்ற ஏக்கம் அவனுக்குள் இருந்தது. அநன்யாவும் பெரியதாக எதுவும் அலட்டிக்காமல் இருக்காளே ஒரு வேளை இது காதல் அல்லாமல் ஒரு சாதாரண ஈர்ப்பு தானோ என்ற சந்தேகம் அவனுக்குள் எழ அந்த சந்தேகம் அப்படியே மூட்டை கட்டிவிட்டு நம் படிப்பை முதலில் கவனமாக முடிப்போம் பிறகு பார்த்துக்கலாம் . எதுவா இருந்தாலும் என்ன... காலம் பதில் சொல்லிக்கொள்ளும் . தற்போது அகல்யா -சதிஷ் இருவரும் திருமணம் முடித்துக்கொண்டாலே போதும் மற்ற விஷயங்களை பிறகு பார்ப்போம் என்று தனக்குள் சமாதானம் செய்து படிப்பில் கவனம் செலுத்தினான் .
இரண்டு வருடங்கள் கடந்ததே தெரியவில்லை படிப்பும் முடிந்தது தற்போது நிரந்தரமாக சென்னை வந்துவிடுவான். எனினும் ஒரே தடவையாக சதிஷ் - அகல்யா திருமணம் நடக்குறப்ப போய்கொள்ளலாம் அதுவரை தான் டெல்லியை சுத்திபாக்கலானு முடிவு எடுத்து நேஹா உதவியுடனும் பிற மருத்துவ நண்பர்கள் உடனும் வெளியே செல்ல ஆரம்பித்தான். நாட்கள் அழகாக சென்றுக்கொண்டு இருந்தன.
அடுத்து என்ன நடக்கும் . சுமுகமாக போதா எல்லாம்???😊😊😊
தொடரும்.
ESTÁS LEYENDO
லவ் குரு (முடிவுற்றது)
Romanceகாதல் பற்றி எவ்வளோ வோ கதையில் படிச்சிருப்போம் ஆனால் இது வித்தியாசமான காதல் கதை. சூழ்நிலை கணவன் மனைவி ஆக்கிவிட்ட நிலையில்..... இருவரும் அந்த வேண்டா வெறுப்பு வாழ்க்கை வாழமுற்படும்போது. அந்த வாழ்க்கை இனிக்கிறதா இல்லை யா??☺️என்பதே கதை.