வீராவின் மாமியார் தன் கணவரின் தோளில் சாய்ந்து கண்கலங்கினார் "என்னங்க என் மகன் நிக்க வேண்டிய இடத்தில் இப்போ நவின் நிக்கிறான் எனக்கு பார்க்க கஷ்டமா இருக்கு என்று அவளின் மனகுமறல் அவர் கேட்டு விட்டு "இங்க பாரு மா...எப்ப நம்ப புள்ளைய பறிகொடுத்தோமோ அப்பவே வீரா நமக்கு சொந்தமில்லை அவ நமக்கு ஒரு மகள் மாதிரி தான் மருமகள் இல்லை... அவளும் பாவம் இந்த இளம் வயதுல விதவையா இருக்கிறது எவ்வளவு கஷ்டம். இப்ப பாரு நவினை கட்டிட்டு மங்கலகரமான வாழ்க்கை வாழபோறா..வா பந்தி ல சாப்பிட்டு கிளம்பலாம்.
ஒருபக்கம் சக்தி முருகேஷிடம்"எனக்கு என்னமோ இந்த கல்யாணத்துல விருப்பம் இல்லைங்க அன்னைக்கு ஜோதிடர் தனுஷ் இன்னும் உயிரோட இருக்கானு சொன்னாரு அப்படி னா தனுஷ் திரும்பி வருவார் ங்க.......
"ஏய் வாயை மூடு என் தங்கச்சி முகத்தில் இப்ப தான் நான் சிரிப்பே பாக்குறன்...நவின் தான் அவளுக்கு பொறுத்தமான தேர்வு அவ அவனோட வாழட்டும் தீர்காயிசா"வரவேற்பு நிகழ்ச்சி நடந்து முடிந்தது மறுநாள் முஹூர்த்தம் வரவேற்பு முடிந்து நவினை பார்ட்டி ஹாலில் உள்ள மொட்டை மாடியில் சந்திக்க "நவின்.... என்ன டா ஒரு மாதிரி இருக்க....???😊
இல்லை.... என்னனு தெரியல மனசு ஒருமாதிரி இருக்கு..என்னை நர்மதா சுத்தி சுத்தி வந்தா அந்த பொன்னு மனசுல நான் முழுசா இருக்கேன் ,எனக்கு கல்யாணம் னு கேள்வி பட்டு அவ மனசு என்ன பாடுபடுமோ நினைச்சாலே கஷ்டமா இருக்கிறது.
இங்க பாரு டா நவீன் நானே மனசு பூர கனவுகளோட உன்னை கைபிடிக்க போறன் ,என் மகள் அகல்யா இனிமே நம்ப பொன்னு புதுசா மூனு பேரும் ஒரு அழகான வாழ்க்கை யை வாழ போறோம் இப்ப போய் இப்படி முகத்தை வச்சிகிட்டு இருந்தா நல்லாவா இருக்கும். நாளைக்கு காலை ல முஹுர்த்தம் . எழுந்து தயார் ஆகனும் போய் படு.
தூக்கம் வரலை டி...
ம்ம்ம் ச்ச..இவன் மூட் மாத்தனுமே எப்படியாவது என்ன செய்யலாம். ம்ம்ம்..... டேய் நவின் வழக்கம் போல ஒரு ஹக் தாயேன் என்றவுடன் அவளை அணைக்க வெடுக்கென்று அவன் கையை (வலது) தன் இடையில் அமர்த்தினாள். அவனோ நாளை முதல் தன்னவள் என்ற உரிமையுடன் அவளது இடையை தீண்ட அவனது மனம் தற்போது மெல்ல மோகத்தினால் மாறியது ,தனது தீண்டலை மெல்ல அவன் அதிகரிக்க அவளோ "இது என்னடா வம்பா போச்சு கொஞ்சம் விட்டா இங்கேயே பர்ஸ்ட் நைட் நடத்திருவான் போல என்று சட்டென்று விலகினாள்.
ESTÁS LEYENDO
லவ் குரு (முடிவுற்றது)
Romanceகாதல் பற்றி எவ்வளோ வோ கதையில் படிச்சிருப்போம் ஆனால் இது வித்தியாசமான காதல் கதை. சூழ்நிலை கணவன் மனைவி ஆக்கிவிட்ட நிலையில்..... இருவரும் அந்த வேண்டா வெறுப்பு வாழ்க்கை வாழமுற்படும்போது. அந்த வாழ்க்கை இனிக்கிறதா இல்லை யா??☺️என்பதே கதை.