பகுதி -15

1.8K 58 5
                                    

திருத்தணி முடிந்து வீடு திரும்பிய முருகேஷ் குடும்பத்தினருக்கு ஒரே அசதி சரி எல்லாரும் ரெஸ்ட் எடுக்கலானு இருந்தப்ப முருகேஷ் க்கு கைப்பேசி அழைப்பு வந்தது எடுத்து பேசியவன் .....அப்படியே மயக்கம் போட்டு விழ .
பதறியபடியே சக்தி தண்ணீர் தெளிக்க "அழுதுகொண்டே நவினை அழைத்தான்...மச்சான் நீ என்னோட கொஞ்சம் வாயேன் நான் போற வழியில் எல்லாம் சொல்றன்.

மாமா என்ன சொல்லு..ங்க ??

ப்ளீஸ் எதுவும் கேக்காத என் கூட ஒரு செட் ட்ரஸ் எடுத்து கிளம்பு ...ஏய் சக்தி என்னோட ஷர்ட் ஒன்னு எடுத்து வை நாங்க வெளியூர் போகனும் வந்து மத்த விஷயம் சொல்றேன் "அப்பா சக்தியை பாத்துக்க..

இருவரும் பஸ்ஸை பிடித்து கிளம்பினர். பஸ் புரப்பட்டது போனில் பேசியதை விவரித்தான் முருகேஷ் தன் மச்சானிடம் (நவின்)அதை கேட்டு மனமுடைந்து கண்கலங்கினான். அவர்கள் இறங்குமிடம் மறுநாள் காலை வந்தது. அவர்கள் சேர வேண்டிய இடத்தை இன்னொரு பஸ் பிடித்து சென்றனர் . இறங்கியவுடன் அங்கு
Crime no cross என்று போட்டு தடுக்கபட்டது அங்கு ஒரு பெண் உடல் தளர்ந்த நிலையில் அழுதுகொண்டே இருந்தாள். முருகேஷ் பார்த்தவுடன் அண்ணா என்று கதறினாள் .ஆம் கதறுவது வேறு யாருமில்லை நம்ப "வீரா"......

அழாத டா மா.....அழாத அதான் அண்ணே வந்துட்டேன் ல இரு இரு விசாரிக்கலாம்.
"சார்....இப்ப என்ன நிலவரம் கிடைக்குமா உடல்???😢

சார் எவ்வளவு தேடியும் கிடைக்கல சார் இது மலைபகுதி அல்லவா அதான் நீங்க பொறுமையா இருங்க அந்த பொன்னை முதல்ல வீட்டுக்கு அனுப்புங்க .ரொம்ப நேரமா அழுதுகொண்டே இருக்கு. என்று போலிஸ் ஒருவர் சொல்லிக்கொண்டு இருக்க.....
நம்ப வீரா நவின் தோளை பற்றி "விம்மி விம்மி அழுதாள் ....என் நிலமையை பார்த்தியா நவின்... ஐயோ என்று கதற அவனுக்கே துர்க்கம் தொண்டை அடைத்தது.
சிறிது நேரத்தில் "மச்சான் நீ வீராவை கூட்டிட்டு கிளம்பு நான் இங்கே பார்மலிட்டிஸ் முடிந்ததும் வரேன் நாளைக்கு...

மாமா இல்லை நாங்க இங்கயே இருக்கிறோம். 😪

சொன்னா புரிஞ்சிக்க நவின் நீ அவளை அழைச்சிட்டு கிளம்பு

ஐயோ மாமா அவ இருக்கிற நிலமைல இப்ப நான் அவளை சமாதானம் பன்னி கூட்டிட்டு போக முடியுமா சொல்லுங்க.

அப்படி னா ஒன்னு பன்னு ரூம் எடுத்து அவளை தூங்க வை...அவ சாப்பிட்டாலோ என்னவோ இரண்டு இட்லி ஆச்சும் சாப்பிட வை...புள்ளதார்ச்சி வேற....
"சரிங்க மாமா..😢

"வா...வீரா என்று அவளை பிடித்துக்கொண்டு நடந்தான் அங்கு ஒரு விடுதி தென்பட்டது "சார் இன்னைக்கு ஒரு நாள் தங்கனும் ஒரு ரூம் கொடுங்க.....
அப்படியே இங்க இருக்கிற மெஸ் ல இரண்டு இட்லி தரவச்சி தாங்க ..

சரிங்க தம்பி இந்தாங்க கீ....ரூமுக்கு போங்க இட்லி வரவழைக்கிறன் சர்விஸ் பாய் வருவார்.

இவன் வீராவை அழைத்து கொண்டு ரூமினுள் சென்றான் ..ரூமிற்கு சென்ற அடுத்த நொடி அசதியில் படுக்கையில் சாய்ந்தாள்.... வயிற்றை பிடித்துக்கொண்டு "அப்பனை விழுங்கிட்டு பொறக்க போறியா பாவி "என்று புலம்பி கொண்டு அழ.....அதை கண்ட நவின் அவள் தலையை வருடி "வீரா...ப்ளிஸ் டா அழாத...அந்த புள்ள என்ன பாவம் பன்னுச்சு பாவம் அது இப்ப தான் சின்ன கரு...அதை போய் திட்டுறியே ".

...மீண்டும் விம்மி அழுதாள் ...அவள் தலையை வருடிய சில நொடியில் அவளுக்கு தூக்கம் வந்தது சரி தூங்கட்டும் என்று அவன் போத்திவிட அதற்குள் சர்விஸ் பாய் இட்லியுடன் வந்தான்....அவளை எழுப்ப மனமில்லாமல் அரைதூக்கத்தில் இருக்கும் அவளுக்கு இவனே ஊட்டிவிட்டான். மறுநாள் காலை எல்லாம் பார்மலிட்டிஸ் முடிந்து மூவருமாக ஊருக்கு புறப்பட்டனர்.

தொடரும்.
என்ன ஆச்சு தனுஷ் க்கு ???? அடுத்து வீராவின் வாழ்க்கை என்ன?? பார்ப்போம்.

சோகமான அப்டேட் ஆனால் கதைக்கு இது தேவை அதான். 😀
No feelings ...Read the story .

லவ் குரு (முடிவுற்றது)Donde viven las historias. Descúbrelo ahora