பௌர்ணமி இரவில் நிலவின் ஒளியில் ஆள் இல்லா சாலையில் "கவி" என்று ஓர் பெண் அலறும் சத்தம் கேட்டது. அச்சத்ததை தொடர்ந்து அவளை யாரோ அடிக்கும் சத்தமும் அதற்க்கு அவள் அழுகும் சத்தமும் கேட்டது.
"டேய் அவ மேல கை வச்சிங்க உங்கள கொன்றுவன் டா" என்று ஒருவன் கோவமாகவும் அதே சமயம் பயமற்று கர்ஜனையாகவும் கூறினான். அவன் முதுகில் கத்தி இறங்கி இருக்க அவன் பின்னந்தலையில் இருந்து ரத்தம் வழிந்துக் கொண்டிருந்தது. அதை எதையுமே பொருட்படுத்தாதவன் தன் பலம் கொண்டு எழுந்து அவனவளை காக்க அவளை சுற்றி இருந்தவர்களை அடித்தான்.
அவள் மேல் சிறு சிறு கீரல்கள் மட்டுமே இருக்க அவளின் கரம் ஓர் இரும்புக் கைக்குள் சிக்குண்டு இருக்க அதை உருவ முடியாமல் கண்ணில் கண்ணீருடன் தன் உயிரானவனின் உயிர் போகும் வலியை கண்கள் சிவக்க பார்த்தவாறு நின்றிருந்தாள்.
மற்ற மூவர் அவனை தாக்க அதில் நிலை தடுமாறியவன் கீழே விழுந்தான். அடிகளும் காயங்களும் பலமாக இருந்ததாலும் கத்தி பட்டு ரத்தம் அதிகம் வெளியேறியதாலும் அவன் அப்படியே மயங்கி விழுந்தான்.
அவன் மயங்கியதும் மூவர் அவனை தூக்கி சென்று இரயில் பாதையில் கிடத்தி விட்டு வர அதற்க்குள் அவளை பிடித்திருந்தவன் அவளை கீழே தள்ளி விட்டு ஓர் இரும்பு கம்பியை எடுத்து சரியாக அவளின் பின்னந்தலையில் அடிக்க அவள் வலி தாங்காமல் "கவி" என்ற அலற அவள் கண்கள் மூடி ஆழ் இருளுக்குள் சென்று மயங்கினாள்.
அவளின் கவி என்ற அலறல் அவன் செவிகளை தீண்ட கடினப்பட்டு கண் திறந்தவன் இரயில் பாதையில் இருந்து எழுந்து தடுமாறி நடந்து ஐந்தாவது அடியில் முடியாமல் பொத்தென விழுந்தவனின் உதடுகள் "சாரி டி" என்ற முனங்கலுடன் மயங்கி போனான்.
----------------------------------------------------
அதிகாலை மூன்று மணி இருள் மறைந்து வெளிச்சம் தொடங்கும் நேரம் இரயில் பாதையை சரி பார்த்தவாறு ஒரு பணியாளர் கையில் விளக்குடன் நடந்து வந்தார்.
YOU ARE READING
உயிரே என்னுயிரே
Romanceதன்னை உயிராய் காதலித்தவளை சுற்றி உள்ள ஆபத்தை தகர்க்க அவனின் முயற்சிகள்..... அவன் தன்னை காதலிக்க மறுத்தும் அவனை தொடர்ந்து தொல்லை செய்து காதலிக்க வைத்தவள்...... அவள் அவனை மறந்தும் அவனே அவளை தேடி அவள் காதலை மெய்பித்தவன்....