கம்பீரமான ஒரு ஐம்பதை தாண்டிய பெரிய மீசைக்காரர் ப்ரணவ் இருந்த அறைக்குள் நுழைய அவரை கண்டதும் அறையில் இருந்த அனைவரும் எழுந்து நின்றனர் ப்ரணவ் உட்பட....
அவர் வேகமாக உள்ளே சென்று ப்ரணவ்வை பிடித்து அமர வைத்து ஒரு அரை ஒன்றை ப்ரணவ் கன்னத்தில் வைத்தார் எஸ்.பி. தர்மபரதன். ப்ரணவின் கார்டியன், ப்ரணவ் தந்தையின் சினேகிதன்.
ப்ரணவிற்கு விழுந்த அறையில் பிரவீனும் சஞ்சய்யும் அவர்கள் கன்னத்தில் கை வைத்துக் கொண்டு அவரை விட்டு தள்ளி நின்றனர்.
விஜய் அதிர்ந்து இருவர் அருகிலும் சென்று நிற்க ப்ரணவ் கன்னத்தில் கை வைத்துக் கொண்டு பாவமாக அவரை பார்த்தான்.
"நா எத்தனை முறை சொன்னன் இது ரொம்ப பெரிய கேஸ் .... ரொம்ப ஆபத்தான கேஸ் ... உன் உயிருக்கு பெரிய ஆபத்து இருக்குன்னு சொன்னனா இல்லையா அதையும் மீறி இல்லை நான் தான் இத ஹான்ட்டில் பன்னுவன்னு கேஸ்ஸ கையில எடுத்து இன்னும் ஒரு துப்பு கூட கண்டுபிடிக்கல இப்படி வந்து படுத்து கிடக்கிற .... இதுக்கு தான் அப்போவே சொன்னன் நீ இதுல இன்வால்வ் ஆகாத டா நாங்க பாத்துக்றோம்ன்னு கேக்கறியா நீ ... பிடிவாதம்" என்று அவர் திட்டிக் கொண்டிருக்க ப்ரணவ் பிரவீனிற்கு விஜய்யை கண்களால் காட்ட அதை புரிந்துக் கொண்ட பிரவீன் விஜய்யை அழைத்துக் கொண்டு வெளியில் சென்றான்.
விஜய் சென்றதை உறுதி செய்துக் கொண்ட ப்ரணவ் "சார்" என்று ஆரமித்து அவர் முகத்தை பார்த்தவன் அடுத்த வார்த்தையை "அங்கிள்" என்று மாற்றினான். அவர் முகத்தில் தெரிந்த கோபம் அப்படி...
"அது வந்து அங்கிள் நா பாதி கண்டுபிடிச்சிட்டன் இந்த கடத்தல்கள செய்ற ஆட்கள் கண்டுபிடிச்சிட்டன் அத செய்ய சொல்ர மெய்ன் கேரக்டர்ர தான் இன்னும் கண்டுபிடிக்கல கூடிய சீக்கிரம் கண்டுபிடிச்சிருவன்" என்று ப்ரணவ் கூற
"அத நீ கண்டுபிடிச்சிருவன்னு எனக்கு தெரியும் ஆனா இப்போ சுடர் .... அவளை எப்படி கண்டுபிடிக்க போற ... இல்லை சுடர்ர வச்சி தான் அவங்களை பிடிக்க எதாவது திட்டம் போட்ருக்கியா" என்று தர்மபரதன் கோபமாகவும் கேள்வியாகவும் பார்த்தார்.
YOU ARE READING
உயிரே என்னுயிரே
Romanceதன்னை உயிராய் காதலித்தவளை சுற்றி உள்ள ஆபத்தை தகர்க்க அவனின் முயற்சிகள்..... அவன் தன்னை காதலிக்க மறுத்தும் அவனை தொடர்ந்து தொல்லை செய்து காதலிக்க வைத்தவள்...... அவள் அவனை மறந்தும் அவனே அவளை தேடி அவள் காதலை மெய்பித்தவன்....