உயிர் - 7

269 16 0
                                    

"அவ எங்க பொண்ணு இல்லை தம்பி" என்று கதிர்வேல் கூறவும் ப்ரணவ், சஞ்சய் மற்றும் பிரவீன் மூவரும் அதிர்ந்தனர்.

"என்ன உங்க பொண்ணு இல்லையா" என்று ப்ரணவ் அதிர்ச்சியாக நம்ப இயலாமல் கதிர்வேலிடம் கேட்டான்.

"ஆமா அவ எங்களுக்கு பிறந்த பொண்ணு இல்லை அவள நாங்க தத்தெடுத்து வளர்த்தோம் இப்போ எங்க பொண்ணு அவளோட உண்மையான உரிமையான வீட்ல இருக்கா" என்று கதிர்வேல் கூற

"சான்ஸ்ஸே இல்லை அவளோட பிறந்த வீட்ல இருக்கவங்களுக்கு இவ வேணுன்னா உண்மைய சொல்லி கூட்டிட்டு போய்ர்கலாம் இல்லை ... எதுக்காக கடத்தனும் அதுவும் என்னை கொலை பன்னிட்டு" என்று ப்ரணவ் தனது சந்தேகத்தை கூற

"அப்படி கூப்ட்டா உன்னோட அக்னி போய்டுவாளா .... உனக்கு தெரியாது அவளுக்கு நாங்க எவ்வளவு முக்கியம்ன்னு" என்று தமையந்தி கூற ப்ரணவிற்கு அவர்கள் கூறுவதை நம்பும்படியாக ஆனது.

அவர்கள் கூறுவதும் உண்மை தான் சுடர்க்கு அவளது பெற்றோர்கள் தான் முதலில் பிறகு தான் காதலன் நண்பன் அண்ணன் நண்பி எல்லாம்...

"இத்தனை வருஷம் கழிச்சி அவங்க எதுக்காக அக்னிய கூட்டிட்டு போனும்ன்னு நினைக்கிறாங்க அவங்க விருப்பப்பட்டு தான அக்னிய உங்க கிட்ட ஒப்படச்சாங்க" என்று ப்ரணவ் கேட்க

"எங்களுக்கு கல்யாணம் ஆகி இரண்டு வருஷமா குழந்தை இல்லை தம்பி கடவுள் நமக்குன்னு ஒரு குழந்தைய கொடுப்பாங்கன்னு வாழ்ந்துட்டு இருந்தோம் அப்போ ..... இந்த ஊர்ல இருக்க சிவன் கோவில் ரொம்ப சக்தி வாய்ந்ததுன்னு கேள்விப்பட்டு நாங்க இரண்டு பேரும் கிளம்பி கோவில் போனோம் ..... அப்போ அங்க ஒருத்தர் கோவில் மண்டபத்துல குழந்தைய பக்கத்துல படுக்க வச்சிட்டு தூண்ல சாஞ்சி சோகமா உட்காந்திருந்தாரு" என்று கூறிய கதிர்வேல் அன்றைய நிகழ்வை நினைத்து பார்த்தார்.

கோவில் மண்டபத்தில் அமர்ந்திருந்தவர் நல்ல செல்வாக்கான ஆள் போல் ஆடை அணிந்திருந்தார். அதோடு குழந்தையை பட்டாடையில் சுற்றி படுக்க வைத்திருந்தார்.

உயிரே என்னுயிரேWhere stories live. Discover now