ப்ரணவ் நான்கு பேரையும் அடித்து கட்டிப்போட்டு வைத்திருக்க அப்பொழுது "இவனையும் சேர்த்து கட்டி வைங்க" என்ற குரலோடு ஒருவன் வெள்ளை ஜிப்பாவில் வந்து ப்ரணவ் முன் விழுந்தான். பிரவீன் அவனை தூக்கி பிடிக்க குரல் வந்த திசையை பார்த்த மூவரும் அதிர்ந்தனர்.
அங்கு நின்றிருந்தது விக்ரம் கவிப்ரணவின் தம்பி. "விக்ரம்" என்று ப்ரணவ் கூற விக்ரம் புன்னகையுடன் உள்ளே வந்து தன் அண்ணனை அணைத்துக் கொண்டான். "நீ எப்படி டா உயிரோட" என்று ப்ரணவ் கேட்க விக்ரம் தன் பக்க கதையை கூற தொடங்கும் முன் பிரவீன் விக்ரம் இழுத்து வந்தவனை கட்டி போட்டு விட்டு வந்தான்.
அன்று விக்ரம் சென்ற புறம் அந்த கோர்ட் சூட்டில் இருந்த பிஸ்னஸ் மேன் மாதேஷ்ஷும் வெள்ளை ஜிப்பாவில் இருந்த டாக்டர் கரணும் ஒரு அறையில் அமர்ந்து குடித்துக் கொண்டிருந்தனர்.
"இன்னைக்கு எனக்கு செம வேட்டை டாக்டர் அந்த பொண்ணு போட்டோவ பாத்ததும் நான் நீன்னு போட்டி போட்டுட்டு காசு அனுப்பறானுங்க" என்று மாதேஷ் கூற கரண்ணோ "எனக்கும் தான் மாதேஷ் அதும் அவ ப்ளட் க்ரூம் ஏபி நெகட்டிவ் .... நமக்கு இன்னைக்குன்னு பாத்து எப்படி அமைஞ்சிருக்கு பாரென்" என்று ஆனந்தமாக கூறி அதே ஆனந்தத்தில் குடித்துக் கொண்டிருந்தனர்.
விக்ரம் அங்கிருந்து நகர்ந்து மற்ற அறைகளை எல்லாம் வீடியோ எடுக்க அப்பொழுது அடியாள் ஒருவன் விக்ரம்மை பார்த்து விட்டான். ஜீவா உள்ளிருக்க கூடாது என்பதற்காக அவனை நோக்கி துப்பாக்கியை எடுத்து அவன் காலில் சுட்டான்.
துப்பாக்கி சத்தம் கேட்டு மாதேஷ்ஷும் கரணும் வர பூஜை தடைபடவில்லை ஜோதிடனும் சாமியாரும் அதை கண்டுகொள்ளாமல் அவர்கள் பூஜையை தொடர்ந்தனர். விக்ரம் தன்னால் முடிந்த அளவு தனி ஆளாக பத்து பேரிடம் சண்டையிட்டு தப்பிக்க முயற்சித்தும் முடியவில்லை. கரண் விக்ரம் உடலில் மயக்க மருந்து கலந்த ஊசியை போட்டு விக்ரம்மை மயக்கமடைய செய்தான்.
விக்ரம் மயக்கமாக இருந்தாலும் அவன் செவிகளில் பேச்சு சத்தங்கள் விழுந்தது அதோடு அந்த பெண் அலறும் சத்தமும் நன்றாகவே கேட்டது. அப்பெண்ணை காப்பாற்ற முடியாமல் மயக்கத்தில் படுத்திருக்கும் விக்ரமிற்கு இரத்தம் கொதித்தது ஆனால் அவனால் சிறிதும் அசையவே முடியவில்லை.
CZYTASZ
உயிரே என்னுயிரே
Romansதன்னை உயிராய் காதலித்தவளை சுற்றி உள்ள ஆபத்தை தகர்க்க அவனின் முயற்சிகள்..... அவன் தன்னை காதலிக்க மறுத்தும் அவனை தொடர்ந்து தொல்லை செய்து காதலிக்க வைத்தவள்...... அவள் அவனை மறந்தும் அவனே அவளை தேடி அவள் காதலை மெய்பித்தவன்....