உயிர் - 24

298 21 1
                                    

விஜய்க்கும் சுடர்க்கும் திருமண ஏற்பாடுகள் செய்து மணமேடையில் இருவரையும் அமர்த்தி விஜய் கையில் தாலியையும் கொடுத்து சுடர் கழுத்தில் கட்ட கூறினர். ப்ரணவ் சம்மந்தமே இல்லாதது போல் அமர்ந்து ஐஸ்க்ரீம் சாப்பிட்டுக் கொண்டிருந்தான்.

விஜய்யை அனைவரும் தாலியை கட்ட கூறி அவசரப்படுத்த யாரும் எதிர்பாராத ஒன்றாக சுடர் மணமேடையில் இருந்து எழுந்து மாலையை கழட்டி ப்ரணவ் மேல் கோபமாக தூக்கி எறிந்தாள். மாலை சரியாக ப்ரணவ் மடியில் சென்று விழுக அவன் கையில் வைத்திருந்த ஐஸ்க்ரீம் அவன் வெள்ளை சட்டையிலே கொட்டியது.

ப்ரணவ் புன்னகையுடன் நிமிர்ந்து பார்க்க அக்னி சுடர் அக்னி பிளம்பாய் ப்ரணவை முறைத்துக் கொண்டு நின்றிருந்தாள். ப்ரணவ் மடியில் விழுந்த மாலையை எடுத்துக் கொண்டு எழுந்து நின்று சுடரை பார்க்க சுடர் வேகமாக மேடையில் இருந்து கீழறங்கி வந்தவள் ப்ரணவை அறைந்தாள்.

ப்ரணவ் புன்னகை மாறா முகத்துடன் கையில் இருந்த மாலையை சுடர் கழுத்தில் போட்டவன் "அடேய் எழுந்து வந்து மாலைய கழட்டி கொடு டா" என்று விஜய்யிடம் கூறினான். விஜய் தன் குடும்பத்தை பார்க்க அவர்கள் அனைவரும் பாதி குழப்பத்திலும் பாதி கோவத்திலும் ப்ரணவ்வையும் சுடரையும் பார்த்துக் கொண்டிருந்தனர்.

இதற்கிடையில் ப்ரணவிற்கு சுடரிடம் இருந்து மற்றொரு அறை விழுந்தது. "ப்பா வலிக்குது டி" என்று ப்ரணவ் கூற "வலிக்கட்டும் .... வலிக்கனுன்னு தான அடிக்கிறன் .... உன்னை விட்டுட்டு வேற ஒருத்தன் எனக்கு தாலி கட்ட வரான் நீ என்னடான்னா அமைதியா உட்காந்து ஐஸ்க்ரீம் சாப்டுட்டு இருக்க ... உன்னை கொன்னா கூட தப்பில்லை" என்று கூறி சுடர் மீண்டும் அடிக்க போக ப்ரணவ் அவளின் இரு கையையும் பிடித்துக் கொண்டான்.

"அடேய் எழுந்திரிச்சி வாடா" என்று ப்ரணவ் கத்த விஜய் எழுந்து வந்து மாலையை கழட்டி ப்ரணவிடம் நீட்ட "இதோ மாலை வந்திருச்சி அதை வாங்கி என் கழுத்துல போடு டி என் செல்லம்" என்று ப்ரணவ் சுடரிடம் கூற சுடர் ப்ரணவ் கையை உதறி விட்டு மாலையை விஜய் கையில் இருந்து பிடுங்கினாள்.

உயிரே என்னுயிரேWhere stories live. Discover now