உயிர் - 3

400 17 2
                                    

பிரவீனின் கைப்பேசி சினுங்க ப்ரணவ் யார் என்பது போல் பார்க்க பிரவீன் "ஜீவசுதாவோட மாமா கால் பன்றான்" என்று கூற ப்ரணவ் "நா இறந்துட்டதாவும் கேஸ் வேற ஒருத்தர்க்கு மாற போகுதுன்னும் சொல்லு" என்று ப்ரணவ் கூற பிரவீனும் சஞ்சய்யும் அதிர்ந்தனர்.

"என்ன டா சொல்ர" என்று பிரவீன் புரியாமலும் அதிர்ச்சியிலும் கேட்க "நா உனக்கு புரியிர மாதிரி சொல்ரன் முதல்ல அவன் கிட்ட நா சொன்ன மாதிரி சொல்லிட்டு அப்பறம் பேசறன்னு சொல்லிட்டு வை" என்று ப்ரணவ் கூற பிரவீனும் அழைப்பை ஏற்றான்.

"ஹலோ சார் நா விஜய் ஜீவாவோட மாமா .... ஜீவாவோட கேஸ் என்ன சார் ஆச்சி எதாவது முன்னேற்றம் இருக்கா" என்று விஜய் தன்னை அறிமுகப்படுத்திக் கொண்டு கேட்க

"ஹான் விஜய் ஒரு சின்ன பிரச்சனை ஜீவாவோட கேஸ் ஹான்டில் பன்னிட்டு இருந்த இன்ஸ்பெக்டர் விக்ரம் டெத் ஆகிட்டாரு கேஸ் வேற ஒருத்தர் கிட்ட கொடுக்றதா இருக்கோம் ... கேஸ் கை மாத்திட்டு நா கால் பன்றன்" என்று பிரவீன் கூற

"சார் என்ன சார் சொல்ரிங்க எப்படி இறந்தாரு என்ன சார் ஆச்சி" என்று விஜய் பதட்டமாக கேட்க "யாரோ கத்தியால குத்திட்டாங்க விஜய் ... நா வேலையா இருக்கன் அப்பறம் கூப்ட்ரன்" என்று கூறிய பிரவீன் அழைப்பை துண்டித்து விட்டான்.

விஜய் என்னவோ ஏதோ என்று அவசரமாக நிதினிடம் ஓடினான். நிதின், தமிழ், யாமினி, விஜய்யின் தங்கை மஞ்சூரி நால்வரும் நிதின் அறையில் ஒன்று கூடி அமர்ந்திருந்தனர்.

"என்ன அண்ணா தாத்தா இப்படி சொல்லிட்டு போறாரு நம்ம ஜீவாவோட இடத்துல அந்த சுடர்ர எப்படி பாக்றது" என்று யாமினி வருத்தமாக கேட்க

"சுடர்ர ஜீவாவோட இடத்துல வச்சி பார்க்காதிங்க டா ஜீவா வேற சுடர் வேற .... சுடர்ர என்னால கூட வேற ஆளா பார்க்க தோனல அவளும் என் தங்கச்சி தான்னு தோனுது" என்று நிதின் கூற

"அப்போ நீ அவளை உன் தங்கச்சியா ஏத்துகிட்ட அப்படி தான" என்று தமிழ் கோவமாக கேட்க "ஆமா அவளும் என் தங்கச்சி தான்" என்று நிதின் கூற

உயிரே என்னுயிரேWhere stories live. Discover now