உயிர் - 14

277 20 0
                                    

சுடரை காணவில்லை என்று நிதினும் தமிழும் வீட்டிற்கு வெளியில் நின்று தேடிக் கொண்டிருக்க மாடியில் யாரோ இருவர் அணைத்திருப்பது தெரியவே நிதினும் தமிழும் அது விஜய்யும் சுடரும் என்று நினைத்துக் கொண்டு அங்கு சென்றனர்.

ஆனால் அங்கு இருந்த ப்ரணவையும் சுடரையும் இருவரும் சுத்தமாக எதிர்பார்க்கவில்லை. இருவரும் அதிர்ந்து கண்களை விரித்து பார்த்தனர். நிதின் கோபமாக இருவர் அருகிலும் சென்றவன் ப்ரணவ்வை சுடரிடம் இருந்து பிரித்து ப்ரணவ்வை அடிக்க சென்றான். சுடர் கோபம் கொண்டு கண்களில் அனல் பறக்க நிதின் கையை பிடித்து தடுத்தாள்.

நிதின் மேலும் அதிர்ந்து சுடரை பார்க்க சுடர் "யார் மேல கை வைக்கிற அவன் என் கவி ... அவன் மேல கை வைக்க உனக்கு உரிமை இல்லை" என்று கேட்க ப்ரணவும் அதிர்ந்து சுடரையே பார்த்துக் கொண்டிருந்தான்.

"சுடர் .... என்ன பேசற நீ .... நா உன் அண்ணன் ... யாரோ ஒருத்தனுக்காக என் கைய பிடிக்கிறியா" என்று கவலையாக நிதின் கேட்க "அண்ணனா .... நீயா .... எனக்கு அண்ணனே கிடையாது .... நா எங்க அம்மா அப்பாக்கு ஒரே பொண்ணு" என்று சுடர் கூற

"சுடர் உனக்கு என்ன ஆச்சி ஏன் இப்படி பிஹேவ் பன்ற .... இரண்டு நாள் பழகனவனுக்காக கூட பிறந்த அண்ணனையே எதிர்த்து பேசற ... யார்ன்னு கேக்கற" என்று நிதின் சுடர் இப்படி தன்னை யாரோ என்பது போல் கேட்கிறாளே என்ற ஆதங்கத்தில் கேட்க

"அவன ஒன்னும் எனக்கு இரண்டு நாளா எல்லாம் தெரியாது மூனு வருஷமா தெரியும் .... அவன் என் உயிர் .... அவனை யாராவது தொடனுன்னு நினைச்சிங்க கொன்றுவன்" என்று சுடர் தனது ஆள் காட்டி விரலை தூக்கி காட்டி மிரட்டியவாறு கூற நிதினும் தமிழும் பேச்சற்று நின்றிருந்தனர்.

ப்ரணவ் சுடர் கையை பிடித்து இழுத்து அவனை நோக்கி திருப்பியவன் அவளை அப்படியே மார்போடு கண்ணீருடன் அணைத்துக் கொண்டான். "அவங்க யார் கவி உன்னை என் கிட்ட இருந்து பிரிக்க... நானா முடிவு பன்னாம நமக்குள்ள பிரிவு வராது கவி .... நீ ஏன் கவி அழுகற ... ஒன்னும் இல்லடா நா உன் கூட இருக்கன்" என்று சுடர் கூற ப்ரணவ் அமைதியாக நின்றிருந்தான்.

உயிரே என்னுயிரேWhere stories live. Discover now