உயிர் - 10

257 21 0
                                    

சுடரை பார்த்துக் கொள்ள கூறி ப்ரணவ் விஜய்யை அனுப்பி விட விஜய்யும் கிளம்பி வீட்டிற்கு சென்றான்.

குளித்து முடித்து தயார் ஆகி கீழே வந்த விஜய் சுடரை காணாது ஹாலை சுற்றி சுற்றி பார்த்தான். நிதின், தமிழ், யாமினி, மஞ்சூரி நால்வரும் அமர்ந்திருப்பதை கண்டு அவர்கள் அருகில் சென்றான் விஜய்.

விஜய்யை கண்டதும் தமிழ் முகத்தை திருப்பிக் கொண்டாள். "வாடா எப்ப வந்த" என்று நிதின் கேட்க "விடியகாலையில வந்தன் டா" என்று விஜய் பதில் கூறி அவன் அருகில் அமர்ந்தான்.

நொடிக்கொரு முறை விஜய் சுடர் அறை கதவை எட்டி எட்டி பார்த்தான். அதை கண்டு கடுப்பான யாமினி "எதுக்கு மாமா இப்போ நீ சுடர் ரூம்மவே பாத்துட்டு இருக்க" என்று கேட்க

"இல்லை குளிச்சிட்டு அவளை கீழ வர சொன்னன் இன்னும் வரல அதான் பாத்துட்டு இருக்கன்" என்று விஜய் பதில் கூற தமிழ் "அவருக்கு நம்ம எல்லாம் கண்ணுக்கு தெரிய மாட்டோம் யாமினி அவர் கல்யாணம் பன்னிக்க போற பொண்ணு மட்டும் தான் இப்ப அவர்க்கு முக்கியம்" என்று கூற

விஜய் சட்டென தமிழ் முகத்தையும் மற்றவர்கள் முகத்தையும் பார்த்தான். தமிழ் மஞ்சூரி யாமினி மூவர் முகத்திலும் சுடர் மேல் கோவமும் சோகமும் நிறைந்திருந்தது.

"எதுக்கு இப்போ மூனு பேரும் சுடர்ர வேற யாரோவா பாக்றிங்க" என்று விஜய் கேட்க "உன்னால வேணுன்னா அவளை ஜீவாக்கு பதில் ரீப்ளேஸ் பன்னி கல்யாணம் பன்னிக்க முடியும் ஆனா எங்களால அவளை ஜீவா இடத்துல வச்சி பாக்க முடியாது" என்று யாமினி கூற

"ஜஸ்ட் ஸ்டாப் இட் யாமினி உங்களுக்கு தெரியுமா நா ஜீவாவோட இடத்தை தான் சுடர்க்கு கொடுத்திருக்கன்னு .... என் லைப்ல ஜீவா வேற சுடர் வேற .... ஜீவாக்கும் எனக்கும் கல்யாணம் ஆகலனாலும் அவ தான் எனக்குள்ள பாதி .... சுடர் நம்ம வீட்டு பொண்ணு ... நம்ம சொந்தம் நம்மளுக்குள்ள ஒருத்தி நம்ம இரத்தத்துல ஒருத்தி அவளை எப்படி வேற ஒருத்தியா பாக்க சொல்ரிங்க" என்று விஜய் கோவமாக கேட்க

உயிரே என்னுயிரேDonde viven las historias. Descúbrelo ahora