உயிர் - 15

275 17 0
                                    

ப்ரணவ் பயர் என்று கூறியது தான் தாமதம் 'டமால் டுமீல்' என்ற சத்தத்துடன் துப்பாக்கிகள் வெடித்து தோட்டாக்கள் சிதறும் சத்தமும் தீப்பொறி பறக்கும் வெளிச்சமும் அங்கு நிறைந்திருந்தது.

ஒரே நொடியில் நடுவில் நின்றிருந்த சுடர் ப்ரணவின் இழுப்பில் ப்ரணவ் மார்பில் மோதி அணைத்தவாறு நின்றிருந்தாள்.

குண்டடி பட்டு அவன் இறந்ததுமே அங்கு நின்றிருந்தவர் கலைந்து வந்த இடத்தை நோக்கி சென்றிட அங்கு ப்ரணவ் மட்டும் சுடரை பார்த்தவாறு நின்றிருந்தான். சுடர் ப்ரணவ் அணிந்திருந்த முகமூடியை இழுத்து அவன் முகத்தை பார்த்தாள்.

ப்ரணவ் சுடர் செய்த திடீர் செயலில் தடுமாறி சுடர் கையில் மாட்டிக் கொண்ட தனது முகத்திரையை வாங்க கை கொண்டு செல்ல சுடர் அதை அவளுக்கு பின்னால் மறைத்துக் கொண்டாள்.

"ஏய் யார் நீ? டெரரிஸ்ட்டா? உங்களுக்கெல்லாம் மனசாட்சி இல்லை ஒருத்தனை ஆறு பேர் துரத்திட்டு வந்து கொலை பன்றிங்க எவ்வளவு தைரியம் இருக்கனும் ... இருங்க இப்பவே உங்களை போலீஸ்ல பிடிச்சி கொடுக்கறன்" என்று கூறிய சுடர் தனக்கு தானே கூட்டமாக வந்தவர்கள் டெரரிஸ்ட் என்றும் செத்தவன் தியாகி என்றும் முடிவுக்கு வந்திருந்தாள்.

ப்ரணவிற்கு அவளின் யூகத்தை எண்ணி சினத்திற்கு பதில் சிரிப்பையே வரவைத்தது. அதோடு அவளுடைய கோபமான சிவந்த முகம் ப்ரணவிற்கு பிடித்து போனது.

"உன் பேர் என்ன?" என்று ப்ரணவ் கடுகடுப்பாக கேட்க "அதெல்லாம் உன் கிட்ட சொல்லனுன்னு எனக்கு அவசியம் இல்லை" என்று கூறிய சுடர் நகர போக ப்ரணவ் சுடர் துப்பட்டாவை பிடித்து இழுத்து அவன் மேல் அவள் முதுகு படுமாறு நிறுத்தியவன் சுடர் நெற்றியில் தனது துப்பாக்கியை வைத்தான்.

"என்னாது பஸ்ட் மீட்லே சுடர் நெத்தில துப்பாக்கிய வச்சிங்களா" என்று தமிழ் அதிர்ச்சியாக ப்ரணவை பார்த்து கேட்க ப்ரணவும் புன்னகையுடன் ஆமாம் என்பது போல் தலையாட்டி விட்டு "எனக்கு அவளோட தைரியம் ரொம்ப பிடிச்சது .... எங்க ஆறு பேருக்கு நடுவுல ஆறு துப்பாக்கிங்களுக்கு நடுவுல எந்த பயமும் இல்லாம தனி ஆளா நின்னா பாரு எனக்கு அப்படியே உடம்பெல்லாம் சிலுத்திருச்சி" என்று கூற

உயிரே என்னுயிரேTempat cerita menjadi hidup. Temukan sekarang