உயிர் - 17

278 18 0
                                    

ப்ரணவ் ஏற்கனவே அவன் வேலை விஷயத்தில் கோவத்தில் இருந்தான். சுடர் அது தெரராமல் அவனை கடுப்பேத்தவும் கோவத்தில் தப்பாக கத்தி விட்டான். சுடருக்கு ஒரு மாதிரி அவமானமாக ஆகிட கண்கள் கலங்கி நின்றாள்.

தன்னை இவ்வளவு கீழ்தரமாகவா அவன் நினைத்திருக்கிறான் என்று நினைத்தவள் அவனை கேலி செய்ததுக்காக மன்னிப்பு கேட்டு விட்டு அங்கிருந்து நிற்காமல் சென்று விட்டாள்.

ப்ரணவ் தனது கோபத்தை பின்னந்தலையை கோதி சற்று குறைத்தவன் சுடரிடம் பேசிய வார்த்தைகளின் வீரியம் புரியவே சுடரை தேடி வண்டியை எடுத்தான்.

பிரவீன் அனைத்தையும் பாத்துக் கொண்டு தான் இருந்தான். தனது நண்பனின் விளையாட்டு என்றாவது விபரீதம் ஆகும் என்று ஏற்கனவே யூகித்தான் ஆனால் அது அவனை அல்ல அவள் மனதை காயமாக்கும் என்று பிரவீன் நினைக்கவில்லை.

அவன் கொட்டிய வார்த்தைக்கு அவனே அனுபவிக்கட்டும் என்று நினைத்த பிரவீன் எதையும் கண்டுகொள்ளாமல் விட்டு விட்டான்.

சுடர் வீட்டிற்கு சென்ற ப்ரணவ் சுடரை பற்றி கேட்க தமையந்தி "அவள அவங்க அப்பா ஹாஸ்பிடல் கூட்டிட்டு போய்ர்காரு ப்ரணவ் நேத்து இருந்து ஜுரம் வாந்தி" என்று கூற "இப்ப தான என்னை பாக்க ஸ்டேஷன் வந்திருந்தா அப்போ நல்லா தான இருந்தா" என்று ப்ரணவ் கேட்க "உன்னை பாக்க தான் அவ்வளவு அவசரமா கிளம்பி வந்தாளா.... உன்னை பாத்துட்டு வர வழியில தான் ரொம்ப முடியல நா ஹாஸ்பிடல்ல இருக்கன் வாங்கப்பான்னு போன் பன்னா அவங்க அப்பாவும் கிளம்பி போய்ர்காரு" என்று தமையந்தி கூற

"சரி எந்த ஹாஸ்பிடல்" என்று ப்ரணவ் கேட்க "அவங்க இன்னும் கொஞ்ச நேரத்துல வந்துருவாங்க நீ இங்கேயே வெய்ட் பன்னு வா" என்று தமையந்தி ப்ரணவை உள்ளே அழைத்துச் சென்றார்.

சிறிது நேரத்தில் கதிர்வேல் சுடருடன் வீட்டிற்கு வந்தார். சுடர் சோர்ந்து போய் கதிர்வேல் கையை பற்றியவாறு உள்ளே வர ப்ரணவ் இருவரையும் கண்டு எழுந்து நின்றான். சுடர் கண்ணை மூடி கதிர்வேல் தோலில் சாய்ந்து நடந்து வந்ததால் முன்னால் இருந்த மேசையில் மோதி தடுமாறினாள்.

உயிரே என்னுயிரேWhere stories live. Discover now