ப்ரணவ் சுடரை அணைத்துக் கொள்ள சுடர் எல்லை இல்லா ஆனந்தத்தில் ப்ரணவ் மார்பில் முகம் புதைத்துக் கொண்டாள். அப்பொழுது அறைக்குள் தமையந்தியும் கதிர்வேலும் நுழைய ப்ரணவும் சுடரும் கதவு திறக்கும் சத்தத்தில் விலகி நின்றனர்.
"சுடர் ... உனக்கு ஒன்னும் இல்லை இல்லை" என்று கேட்டவாறே தமையந்தியும் கதிர்வேலும் தங்களின் மகளின் அருகில் சென்று அவள் தலையை கோதி கேட்டனர். "எனக்கு ஒன்னும் இல்லம்மா சின்ன காயம் தான்" என்று சுடர் கூறவும் ப்ரணவ் "சரி நா அப்பறம் வரன்" என்று கூறி அங்கிருந்து நகர்ந்து விட்டான்.
"என்னம்மா என்ன சொல்ரான் உன் ஆளு எதாவது சென்டிமென்ட் சீன் நடந்ததா" என்று கதிர்வேல் கேட்க "எப்ப பாரு புள்ளைய நீங்க தான் உசுப்பேத்தி கெடுக்கறதே ... அதனால தான் பசங்க மாதிரி நடு ராத்திரில கூட வெளில சுத்தரா" என்று தமையந்தி கூற "என் பொண்ணு தைரியசாலி டி" என்று கதிர்வேல் கூற தமையந்தி "ம்க்கும்" என்று முறுக்கிக் கொண்டார்.
"அவ கிடக்கறா நீ சொல்லு டா" என்று கதிர்வேல் கேட்க சுடர் "ஆமாப்பா பையன் இப்ப தான் என் பக்கம் கொஞ்சமா சாஞ்சி இருக்கான் ... இப்ப தான் பிடிச்சிருக்குன்னு சொல்ர அளவுக்கு கொண்டு வந்திருக்கன் கூடிய சீக்கிரம் ஐ லவ் யூ ன்னு சொல்ல வச்சிட்றன்" என்று கூற கதிர்வேல் "எனக்கு தெரியும் டா நீ முடிச்சிடுவன்னு" என்று கூற தமையந்தி தந்தை மகளின் பேச்சை கேட்டு தலையில் அடித்துக் கொண்டார்.
அடுத்த நாளிலில் இருந்து ப்ரணவ் சுடரை காண வந்தான். சுடர் ப்ரணவ் வந்திருப்பதை பார்த்து "உன்னால தான் எனக்கு அடி பட்டுச்சின்ற கில்ட்டில என்ன பாக்க வரன்னா வராத கவி ... என் மேல உண்மையிலே அன்பு இருந்தா மட்டும் வா" என்று கூற ப்ரணவ் புன்னகையுடன் "உன்னை பிடிக்கும் டி .... என்னை நீ எவ்வளவு மாத்திட்ட தெரியுமா ... நா எப்பவுமே எனக்கு வேண்டியவங்கள தேடி போக மாட்டன் அவங்கள தான் வர சொல்லுவன் பஸ்ட் டைம் நா உன்னை தேடி வந்திருக்கன்" என்று கூற
"அப்போ நா ரொம்ப ஸ்பெஷல் இல்லையா ... ஆனா எனக்கொரு டௌட் உனக்கு வேண்டியவங்களுக்கு உடம்பு முடியலன்னா நீயா போக மாட்டன்னா எப்படி அவங்கள பாக்க போவ" என்று சுடர் கேட்க "பிரவீன்னா வந்து என்னை இழுத்துட்டு போவான்" என்று ப்ரணவ் கூற "ஸ்டோன் ஹார்ட்" என்று சுடர் கூற ப்ரணவ் "பழக்கப்பட்டது தான்" என்று கூறி புன்னகைத்தான்.
YOU ARE READING
உயிரே என்னுயிரே
Romanceதன்னை உயிராய் காதலித்தவளை சுற்றி உள்ள ஆபத்தை தகர்க்க அவனின் முயற்சிகள்..... அவன் தன்னை காதலிக்க மறுத்தும் அவனை தொடர்ந்து தொல்லை செய்து காதலிக்க வைத்தவள்...... அவள் அவனை மறந்தும் அவனே அவளை தேடி அவள் காதலை மெய்பித்தவன்....