உயிர் - 4

325 18 1
                                    

சுடர் வீட்டின் முன்னும் பின்னும் எங்காவது கேமரா இருக்கிறதா என்று பார்த்த பிரவீனுக்கு ஏமாற்றமே மிஞ்சியது. தெரு முடிவில் இருந்த ஒரு வீட்டில் மட்டுமே ஒரு கேமரா இருக்க அதில் சுடர்ரை பற்றின தகவல் தடையம் எதாவது கிடைக்குமா என்று பார்த்துக் கொண்டிருந்தான்.

பல வாகனங்கள் சென்று வந்துக் கொண்டிருக்க சுடரும் அவளுடைய ஸ்கூட்டியில் வீட்டை நோக்கி சென்றாள். அவள் பின்னாலே ஒரு இருசக்கர வாகனம் ஹெல்மட் அணிந்தவாறு அவளை பின் தொடர்ந்தது. பிரவீன் முதலில் அது எதர்ச்சையாக கூட இருக்கலாம் என்று அடுத்த நாள் கேமாராவை போட்டு பார்க்க அதிலும் அதே வண்டி சுடர்ரை பின் தொடந்தது. பிரவீனுக்கு சந்தேகம் வரவே வண்டி நம்பரை குறித்துக் கொண்டு அங்கிருந்து நகர்ந்தான்.

வீட்டை விட்டு வெளியில் வந்த பிரவீன் இத்தகவலை ப்ரணவிடம் கூற வேண்டும் என்று அவன் எண்ணிற்கு அழைத்தான். ப்ரணவ் எப்படி எடுப்பான் சஞ்சய் தான் அவன் கைப்பேசி எடுத்து சென்று விட்டானே.

"சொல்லு டா" என்று சஞ்சயின் குரல் கேட்கவே பிரவீன் தான் தவறி சஞ்சய்க்கு அழைத்து விட்டோமோ என்று தனது கைப்பேசியை காதில் இருந்து எடுத்து முகப்பை பார்த்தான்.

அதில் ப்ரணவ் எண்ணை தான் காட்ட பிரவீன் "ப்ரணவ் போன்ன நீ ஏன் டா எடுக்கற அவன் கிட்ட கொடு" என்று கூற "அவன் இப்ப தான் மாத்திரை போட்டு தூங்கி இருக்கான் அவன் எழுந்த அப்பறம் பேசிக்கோ" என்று சஞ்சய் கூற

"டேய் ஒரு முக்கியமான விஷயம் பேசனும் டா எழுப்பி கொடு" என்று பிரவீன் கூற "நீயும் ஒரு போலீஸ் தான சுடர் உனக்கு தங்கச்சி தான அவ மேல பாசம் இருக்கு இல்லை ப்ரணவ் மேல அக்கரை இருக்கு இல்லை நீயே வழிய கண்டுபிடிச்சி சுடர்ர கண்டுபிடி" என்று சஞ்சய் கூற

"எல்லாம் சரி தான் ஆனா ப்ரணவ் ஒரு கோணத்துல சுடர்ர எப்படி கண்டுபிடிக்கனுன்னு யோசிச்சி வச்சிருப்பான் நா எதாவது பன்ன போய் அவன் வழில தடங்கல்ல ஏற்படுத்த விரும்பல அதனால தான் அவனை கேட்டு அவன் சொல்ரத செய்ரன் புரியுதா ... அவனை எழுப்பி போன்ன கொடு" என்று பிரவீன் கூற "முடியாது போடா" என்று கூறிய சஞ்சய் அழைப்பை துண்டித்து விட்டான்.

உயிரே என்னுயிரேWhere stories live. Discover now