விஜய் சென்னை கிளம்பி வர பிரவீன் விஜய்யை ப்ரணவிடம் அழைத்துச் சென்றான். விஜய்யை கண்டதும் ப்ரணவ் "வாடா ஆனந்த் எப்படி இருக்க" என்று கேட்க பிரவீனும் சஞ்சய்யும் அதிர்ந்தனர்.
"என்னது ஆனந்த்தா" என்று பிரவீனும் சஞ்சய்யும் ஒரே குரலில் கேட்க விஜய் மூவரையும் நன்கு உற்று பார்த்து யோசித்தான்.
சிறிது நேரத்தில் விஜய் முகத்தில் புன்னகை மலர "டேய் ப்ரணவ், பிரவீன், சஞ்சய்" என்று கூறி மூவரையும் பார்க்க மூவரும் "நாங்களே தான்" என்று கூறி சிரித்தனர்.
விஜய் சென்று பிரவீனையும் சஞ்சய்யையும் அணைத்துக் கொள்ள ப்ரணவ் "பரவால்லயே எங்களை ஞாபகம் வச்சிருக்க" என்று கேட்க விஜய் ப்ரணவ் அருகில் இருந்த நாற்காலியில் அமர்ந்து "ஏன் டா நா போய் உங்களை மறப்பனா நம்ம நாலு பேரும் தான ஸ்கூல்ல ஒன்னா சுத்திட்டு இருப்போம்" என்று கூற
"நா உன்னை அடையாளம் கண்டு பிடிச்சிட்டன் ஆனா நீ ரொம்ப நேரம் யோசிச்சு தான எங்களை கண்டு பிடிச்ச" என்று ப்ரணவ் கூற
"என்னால யோசிக்க முடியல டா வாழ்கை பூராம் கூட வர போறான்னு நம்பி ஒருத்தி கிட்ட மனச கொடுத்து அவ இப்போ இல்லாம போகவும் எனக்கு வேற எதலையுமே கவனம் போகறதில்லை" என்று விஜய் சோகமாக கூற மூவரும் விஜய் தோலை பற்றி ஆறுதல் படுத்தினர்.
"சரி அத விடுங்க நீங்க எப்படி இருக்கிங்க .... ப்ரணவ் உனக்கு எப்படி அடிபட்டுச்சி" என்று விஜய் கேட்க "ஒரு சின்ன ஆக்ஸிடென்ட்" என்று ப்ரணவ் கூற
"இந்த கட்டு எல்லாம் சின்ன ஆக்ஸிடென்ட்க்கு போட்ர கட்டு மாதிரி தெரியலையே" என்று விஜய் கூற
"நா அப்போவே சொன்னன் சின்ன கட்டா போட்றா பாக்கறவங்க பயந்துருவாங்கன்னு இந்த சஞ்சய் தான் கேட்கல" என்று ப்ரணவ் கூற
"சஞ்சய் டாக்டர்ரா" என்று விஜய் கேட்க "ஆமா மச்சான் டாக்டர் தான்" என்று சஞ்சய் விஜய் தோலை அழுத்தி விடுவித்தான்.
"அப்போ நீ ப்ரணவ்" என்று விஜய் கேட்க "டி.எஸ்.பி உன் ஜீவாவோட கேஸ இனிமே ஹான்டில் பன்ன போறவன்" என்று ப்ரணவ் கூற பிரவீனும் சஞ்சய்யும் ஒருவரை ஒருவர் பார்த்துக் கொண்டு குழப்பமாக ப்ரணவ்வை பார்த்தனர்.
YOU ARE READING
உயிரே என்னுயிரே
Romanceதன்னை உயிராய் காதலித்தவளை சுற்றி உள்ள ஆபத்தை தகர்க்க அவனின் முயற்சிகள்..... அவன் தன்னை காதலிக்க மறுத்தும் அவனை தொடர்ந்து தொல்லை செய்து காதலிக்க வைத்தவள்...... அவள் அவனை மறந்தும் அவனே அவளை தேடி அவள் காதலை மெய்பித்தவன்....