உயிர் - 9

266 21 0
                                    

விஜய் கைப்பேசி சினுங்க அதை எடுத்து பார்த்தவன் மற்ற மூவரையும் பார்த்து "வீட்ல இருந்து தான்" என்று கூற அவர்களும் அழைப்பை ஏற்கும்படி கூறினர்.

விஜய் அழைப்பை ஏற்று ஸ்பீக்கரில் போட்டு விட்டு "ஹலோ" என்று கூற மறுமுனையில் "விஜய் சுடர் வீட்டுக்கு வந்துட்டா இன்னும் ஒரு மாசம் கழிச்சி உனக்கும் அவளுக்கும் கல்யாணம்ன்னு வீட்ல எல்லாரும் பேசிக்றாங்க" என்று மஞ்சூரி கூற விஜய் அதிர்ந்தான்.

ப்ரணவ் விஜய்யை கொலைவெறியுடன் முறைத்துக் கொண்டிருந்தான். "ஹேய் என்ன டி சொல்ர அவ எப்படி நம்ம வீட்டுக்கு வர ஒத்துகிட்டா அவ அப்பா அம்மாவ பத்தி அவ கேக்கலையா" என்று விஜய் அதே அதிர்ச்சியுடன் கேட்க அவள் அடுத்து கூறிய "அவளுக்கு பழசு எதுவும் ஞாபகம் இல்லை" என்ற வார்த்தையில் மொத்தமாக சிலையானான்.

"என்ன பழசெல்லாம் மறந்துட்டாளா ... போச்சி போச்சி ... எல்லாம் போச்சி ... என் கடைசி நம்பிக்கையும் போச்சி ... இப்ப வீட்ல என்ன சொல்லி தப்பிக்றது" என்று விஜய் புலம்ப மஞ்சூரி "என்னால கண்டிப்பா இவளை ஜீவா இடத்துல வச்சி பாக்க முடியல விஜய் நம்ம வீட்ல இருக்கவங்க தான் தலையில தூக்கி வச்சி கொண்டாடராங்க நம்ம அப்பா அம்மா மாமா அத்தை தாத்தாவ மீறி நம்மளால இங்க எந்த ரியாக்ஷனும் காட்ட முடியாது .... எனக்கும் என்ன பன்றதுன்னு தெரியல நிதின் மட்டும் தான் இது வரைக்கு அவ கிட்ட பேசி இருக்கான் நாங்க மூனு பேருமே பேசல அவளும் பேசல" என்று மஞ்சூரி கூற

"நா அப்பறம் பேசறன் மஞ்சு" என்று விஜய் அழைப்பை துண்டித்து விட ப்ரணவ் விஜய்யை முறைத்துக் கொண்டிருந்தான்.

"மச்சான் எனக்கும் அதுக்கும் சம்மந்தம் இல்ல டா நா ஜீவாவ தான் லவ் பன்றன் உன் அக்னி மேல எனக்கு எந்த எண்ணமும் இல்லை அவ எனக்கு மஞ்சூரி மாதிரி தான்" என்று விஜய் ப்ரணவின் முறைப்பில் பயந்து ப்ரணவ் திட்டும் முன் தனது காதையும் உடலையும் காப்பாற்றிக் கொண்டான்.

"இப்ப நீ என்ன பன்ற உடனே உன் திங்க்ஸ் எல்லாம் எடுத்துகிட்டு ஊருக்கு எங்களையும் கூட்டிட்டு கிளம்பற" என்று ப்ரணவ் கூற

உயிரே என்னுயிரேDonde viven las historias. Descúbrelo ahora