உயிர் - 13

263 22 0
                                    

பெரியவர்கள் பேசியதை கேட்டு குழம்பி போன தமிழ் தனது சந்தேகத்தையும் தான் கேட்டதையும் நிதினிடம் கூற வேண்டும் என்று வேக வேகமாக நிதினை தேடி சென்றவள் சஞ்சய் மேல் மோதி நின்றாள்.

"ஏய் பாத்து எதுக்கு இவ்வளவு அவசரமா ஓட்ற" என்று சஞ்சய் கேட்க "அதெல்லாம் பெரிய விஷயம் உங்க கிட்ட சொல்ல முடியாது நகருங்க" என்று கூறியவள் நிதின் அறைக்கு ஓடினாள்.

'என்ன ஆச்சி இவளுக்கு ஒருவேளை அவங்க பேசனதுல ஏடா கூடமா கேட்டுட்டாளா' என்று நினைத்தவன் தாமதிக்காமல் தமிழ் சென்ற திசையில் சென்றான்.

தமிழ் தான் கேட்டதை அனைத்தையும் நிதினிடம் கூறி விட்டு நிற்க நிதின் "அப்பா சுடர்க்கு ஆபத்துன்னு மட்டும் தான் எழுதி இருந்தாரு ஆனா அது நம்ம குடும்பத்துல இருக்கவங்கலாலேன்னு இப்ப நீ சொல்ரத வச்சி தெரியுது" என்று கூற சஞ்சய் 'ஆக இவங்களுக்கும் சுடருக்கு ஆபத்து இருக்குன்னு தெரிஞ்சிருக்கு' என்று நினைத்தவன் நிதினின் பேச்சை கேட்க துவங்கினான்.

"என்னால இப்ப கூட நம்ப முடியல தமிழ் நம்ம வீட்ல இருக்கவங்க எதுக்காக சுடர்ர இங்க தங்க வச்சி பாசம் காட்ர மாதிரி நடிக்கனும் .... அவளை வச்சி என்ன பன்னனுன்னு நினைக்கிறாங்க ஒன்னுமே புரியல ... ஆனா நா கண்டிப்பா ஜீவாவ விட்ட மாதிரி விட்ர மாட்டன் சுடர்க்கு எந்த ஆபத்தும் வர விட மாட்டன்" என்று நிதின் கூற "நானும் உனக்கு ஹெல்ப் பன்றன் அண்ணா" என்று தமிழ் கூற நிதின் புன்னகைத்தான்.

சஞ்சய் விஜய் அறைக்கு சென்று இதை ப்ரணவிடம் கூற "நம்ம நிதின் கிட்ட பேசி ஆகனும் அவனோட ஹெல்ப் இதுல ரொம்ப முக்கியம் ... அவனுக்கு சுடர் இங்க வர போறது அவளுக்கு ஆபத்து இருக்கறது எல்லாம் தெரிஞ்சிருக்கு சோ நம்ம அவனை தனியா கூப்ட்டு பேசனும் தமிழையும் கூப்ட்டு பேசனும் அவ என்ன கேட்டான்றத நம்ம ஒரு வார்த்தை விடாம கேட்கனும் அதுல நமக்கு எதாவது க்ளு கிடைக்கும்" என்று கூறிய ப்ரணவ் அவர்களை தேடி செல்ல போக பிரவீன் "இப்ப வேணா டா இந்த வீட்ல சுவருக்கு கூட காது இருக்கலாம் நம்ம நாளைக்கு வெளில போறோம் இல்லை அங்க அவங்களை தனியா கூப்ட்டு பேசலாம்" என்று கூற ப்ரணவும் சரி என்று அமைதியாகினான்.

உயிரே என்னுயிரேМесто, где живут истории. Откройте их для себя