கைப்பேசியில் பேசிக் கொண்டிருந்த பிரவீனை பின்னால் யாரோ தட்டவும் யார் என்று திரும்பி பார்த்தவன் அதிர்ந்ததோடு பயத்தில் கைப்பேசியை தவற விட்டு படியில் விழ போனான்.
எப்படியோ பின்னால் முன்னால் என்று சாய்ந்து படியின் கம்பியை பிடித்து நின்றவன் தன் நெஞ்சின் மேல் கை வைத்து தன்னை சிறிது ஆசுவாசப்படுத்திக் கொண்டான்.
எதிரில் இருந்த உருவம் பிரவீன் செய்கையில் குழம்பி போய் நிற்க பிரவீன் கத்திய கத்தலில் சஞ்சயும் விஜயும் வெளியில் வந்து பார்த்தனர்.
பிரவீன் சிறிது தெளிந்ததும் எதிரில் இருந்த முகத்தை கண்டு சிரிக்க தொடங்கினான். எதிரில் இருந்த உருவம் அவனை இடையில் கை வைத்துக் கொண்டு முறைத்தது.
சஞ்சய்யும் விஜயும் பிரவீனின் செய்கையை கண்டு ஒன்றும் புரியாமல் நின்றிருக்க பிரவீன் சிரித்தவாறே சஞ்சய் மற்றும் விஜய் புறம் செல்ல அவ்வுருவமும் அவர்களை நோக்கி திரும்பியது.
இப்பொழுது பிரவீன் மட்டுமல்ல சஞ்சய்யும் விஜய்யும் கூட சிரிக்க தொடங்கினர். அனைவரின் சிரிப்பையும் கண்டு கோபமான யாமினி "எதுக்கு இப்போ மூனு பேரும் இப்படி சிரிக்கிறிங்க" என்று கேட்க
"யாரு டி உனக்கு மேக்கப் போட்டது" என்று விஜய் சிரிப்பின் இடையிலே கேட்க "தமிழ் தான் போட்டா ஏன் எதாவது கோணலா போட்டுட்டாளா இல்லை எதாவது அதிகமா இருக்கா" என்று யாமினி ஒன்றும் அறியா பிள்ளையாய் கேட்க விஜய் பதில் கூறும் முன் சிரித்து சிரித்து வயிறு வலி வந்த பிரவீன் "இரு மச்சான் லைவ்வாவே காட்டிருவோம்" என்று கூறி யாமினி பின் சென்றவன் அவள் தோலில் கை வைத்து தள்ளியவாறு விஜய் அறைக்கு அழைத்து சென்று கண்ணாடி முன் நிறுத்தினான்.
யாமின் தன் முகத்தை கண்ணாடியில் பார்த்ததுமே அலறி விட்டாள். யாமினியின் முகம் முழுக்க வெள்ளை அடித்து அதில் நெற்றியில் இருந்து அவள் கன்னம் வரை கண்கள் மேலோடு சேர்த்து ஒரு தையல் போன்ற அமைப்பும் அதோடு அதிலிருந்து இரத்தம் வடிவது போல் சிவப்பு நிறத்தில் ஒரு அமைப்பும் போட்டு இடக்கண்ணை சுற்றி கருப்பு வளையம் அமைத்திருந்தது. அது மட்டுமல்லாமல் யாமினியின் உதட்டின் ஒரு ஓரம் உதடு கிழிந்து பற்கள் தெரிவது போல் இருந்தது.
ESTÁS LEYENDO
உயிரே என்னுயிரே
Romanceதன்னை உயிராய் காதலித்தவளை சுற்றி உள்ள ஆபத்தை தகர்க்க அவனின் முயற்சிகள்..... அவன் தன்னை காதலிக்க மறுத்தும் அவனை தொடர்ந்து தொல்லை செய்து காதலிக்க வைத்தவள்...... அவள் அவனை மறந்தும் அவனே அவளை தேடி அவள் காதலை மெய்பித்தவன்....