உயிர் - 20

260 18 0
                                    

சுடர் தனியாக அமர்ந்திருக்க அவள் அருகில் அமர்ந்தவன் அவளை இழுத்து இதழில் முத்தமிட சுடர் அவனை அடித்துக் கொண்டே விலக முயற்சிக்க அவன் பிடியில் இருந்து இம்மியளவும் அசையவே முடியவில்லை. கண்ணீர் சுரக்க அமைதியாகியவளை விட்டவன் அவள் கண்களை பார்த்தான். கண்களில் அவ்வளவு கோபம் வெறுப்பு விட்டால் கண்களாலே எரித்து விடுவாள்.

அவனோ புன்னகையுடன் "இப்ப கூட உன் முகத்துல பயம் வரல பாத்தியா" என்று ப்ரணவ் குரல் கேட்கவே சுடருக்கு அவனின் குரலும் அவனின் கேள்வியும் அவனை யார் என்று அறிமுகப்படுத்தியது. விக்ரம் முகம் கொண்ட போலி முகமூடிக்குள் ப்ரணவ் அவன் முகத்தை மறைத்திருந்தான்.

"லூசு லூசு நா யாரோன்னு நினைச்சி உன்னை கொன்றுப்பன்" என்று சுடர் அவனை அடிக்க அவனோ சிரித்துக் கொண்டே "சரி சரி டி எப்படி நம்ம கிஸ்" என்று கேட்க "கேவலமா இருந்துச்சி ... அறிவில்லை உனக்கு நம்மளோட பஸ்ட் கிஸ் இப்படியா அதும் யாருன்னே முகம் தெரியாத ஒரு முகமூடியோட .... எனக்கு இப்ப கூட உடம்பெல்லாம் பத்திகிட்டு எரியுது ... உள்ள இருக்றது நீயா இருந்தாலும் இது வேற முகம் வேற ஒருத்தர் கொடுக்றதா தோனாதா எனக்கு ... எதையுமே யோசிக்க மாட்டியா ... பெரிய போலீஸ் வேற இவர் இதுல ... ச்சீ போ பேசாத" என்று கோபமாக கூறியவள் முன்னால் நடக்க தொடங்கினாள்.

"அடியேய் இரு டி .... சாரி .... சாரி ... சாரி ... அக்னி சாரி டி நில்லு டி" என்று ப்ரணவ் அவள் கையை பிடித்து தடுத்தான். "கைய விடு கவி" என்று தனது கையை அவனிடம் இருந்து பிரித்துக் கொண்டவள் "இந்த முகமூடியோட இனிமே என்னை நெருங்காத ... தள்ளி நின்னு பேசு யாரோ மாதிரி இருக்கு" என்று சுடர் கூற ப்ரணவ் "ஓகே ஓகே தள்ளியே இருக்கன் போதுமா" என்று கூறி இரண்டடி நகர்ந்து நின்றான்.

சுடர் இன்னமும் கோபம் குறையாமல் நின்றிருக்க "மேடம் இப்பவாவது கொஞ்சம் சிரிக்கலாம் இல்லை இன்னும் என்ன கோபம்" என்று கேட்க "ஒருவாரம் கழிச்சி வந்திருக்கியே ஒருவேளை உனக்கு இந்த பக்கம் எதாவது வேலையோ என்னவோன்னு யோசிச்சிட்டு இருக்கன்" என்று சுடர் கூற "இல்லடி உன்னை பாக்க தான் வந்தன்" என்று ப்ரணவ் கூற

உயிரே என்னுயிரேDove le storie prendono vita. Scoprilo ora