உயிர் - 16

269 21 0
                                    

ப்ரணவ் சுடரை கடத்தி வைத்திருக்க சுடர் தன்னை கடத்தி வந்து கசங்கி எறிந்த ப்ரணவ் மேல் கொலைவெறியில் இருந்தாள். அங்கிருந்து தப்பிக்க என்ன செய்யலாம் என்று குளித்து விட்டு ப்ரணவ் கொடுத்து சென்ற ஆடையை அணிந்துக் கொண்டு கட்டிலில் அமர்ந்து யோசித்துக் கொண்டிருந்தாள்.

கதவு திறந்து பார்த்தாள் ப்ரணவ் வெளியில் பூட்டி விட்டு சென்றிருந்தான். கதவு திறக்க முடியாததால் ப்ரணவை திட்டிக் கொண்டு அறையை சுற்றி தப்பிக்க வழி தேடி கிடைக்காததால் கட்டிலில் அமர்ந்து விட்டாள்.

அப்பொழுது கைப்பேசியில் பேசிக் கொண்டே கதவை திறந்து உள்ளே வந்த ப்ரணவ் சாப்பாட்டு பொட்டலத்தை மேசை மேல் வைத்து விட்டு "சாப்பிடு" என்பது போல் சைகை செய்து விட்டு கதவை திறந்தது போலவே விட்டு சென்றான்.

சுடருக்கு அவன் சைகை உள்ளே வைத்த சாப்பாடு என்று எதுவும் தெரியவில்லை அவன் சாற்றாமல் சென்ற கதவு தான் கண்களுக்கு தெரிந்தது. நொடியும் தாமதிக்காமல் விருட்டென எழுந்தவள் கதவை பிடித்துக் கொண்டு வெளியில் எட்டி பார்த்தாள். ப்ரணவ் மும்மரமாக ஏதோ பேசிக் கொண்டிருக்க சுடர் மெதுவாக சத்தம் வராமல் அங்கிருந்து நழுவி வெளியில் ஓடி விட்டாள்.

அழைப்பை துண்டித்து விட்டு அறைக்கு சென்ற ப்ரணவ் சுடர் காணாததை கண்டு அதிர்ந்தான். அந்த அதிர்ச்சி ஒரு நிமிடம் தான் மறுநிமிடமே அவளின் தைரிய செயலை நினைத்து புன்னகையில் அவன் இதழ்கள் விரிந்தது.

எப்படியும் அவள் போலீஸை தேடி தான் சென்றிருப்பாள் என்று நினைத்தவன் காவல் நிலையம் செல்ல காவல் உடையை அணிந்து தயார் ஆகினான்.

சுடர் வீட்டிற்கு வெளியில் வந்ததும் அவசரமாக ஒரு ஆட்டோவை பிடித்தவள் நேராக எஸ்பி அலுவலகத்திற்கே சென்று விட்டாள். ஆட்டோகாரன் காசு கேட்கவும் தான் சுடர் தனது பர்சை காணவில்லை என்பதையே உணர்ந்தாள்.

"சாரிண்ணா பர்ஸ் மறந்துட்டன் நீங்க இங்கேயே வெய்ட் பன்னுங்க நம்ம திரும்பி போனதும் நா கொடுத்தர்ரன்" என்று கூறிய சுடர் அவசரமாக உள்ளே ஓடினாள். ஆட்டோகாரரும் ஏதோ அவசரம் போல என்று எண்ணி அமைதியாக சுடருக்காக காத்திருந்தான்.

உயிரே என்னுயிரேWhere stories live. Discover now