உயிர் - 11

330 19 0
                                    

சுடர் மாமா என்று அழைத்ததும் புன்னகையுடன் ப்ரணவ் திரும்ப அதே வெள்ளை சட்டையுடன் விஜய் கோவிலின் உள்ளிருந்து வெளியில் வந்தான்.

சுடர் ப்ரணவ் முகத்தையே பார்க்க ப்ரணவும் தன் பார்வையை அகற்றாமல் அவனின் அக்னி முகத்தையே பார்த்துக் கொண்டிருந்தான். தான் பார்த்த அக்னிக்கும் இப்பொழுது இருக்கும் அக்னிக்கும் முக மாற்றங்களே அவளது வித்தியாசத்தை கூறியது.

'இது என் அக்னியே இல்லை அவளை அவளே மறந்துட்டு இருக்கா ... கவலைபடாத அக்னி உன்னை பழைய மாதிரி மாத்தி இங்க இருந்து கண்டிப்பா உன்னை என் பொண்டாட்டியா தான் கூட்டிட்டு போவன்' என்று மனதிலே கூறிக் கொள்ள சுடர் "எதாவது சொன்னிங்களா" என்று ப்ரணவிடம் கேட்டாள்.

ப்ரணவ் பெரிய புன்னகையுடன் இல்லை என்பதாய் தலையாட்டினாலும் மனதில் அவள் இன்னமும் தன்னுடைய மனகுரலை கேட்கிறாள் என்று பூரித்து போனான்.

"சாரி நா விஜய் மாமான்னு நினைச்சி உங்களை...." என்று சுடர் பேச்சை நிறுத்தி ப்ரணவை பார்க்க ப்ரணவ் "என்னை" என்று சுடர் கூறிய மாமா என்னும் சொல்லை எதிர்பார்த்து கேட்க

"மாமான்னு கூப்ட்டன்" என்று சுடர் தரையை பார்த்து கூறினாள். சுடரால் ப்ரணவின் புன்னகை நிறைந்த முகத்தை காண தவிப்பாக இருந்தது. அவளது கண்கள் ப்ரணவை நோக்கி நிமிர்ந்தாலும் தலை தரையையே தேடியது.

சொல்ல முடியா இன்பத்தை ப்ரணவ் அருகாமை கொடுத்திட சுடர் அவனை விட்டு நகராமலே நின்றிருந்தாள்.

சுடரை பார்த்ததுமே அள்ளி அணைத்து முத்தமழையில் நனைத்திடும் ஆசையை கடினப்பட்டு அடக்கிக் கொண்டு நின்றிருந்தான் ப்ரணவ். என்ன தான் அவளை வீடியோ மூலம் பார்த்துக் கொண்டே இருந்தாலும் இப்பொழுது அவளை நேருக்கு நேர் பார்த்ததும் காதல் மனம் அவள் அணைப்பை தான் தேடியது.

ஆனால் தன்னை பற்றியே மறந்து நிற்கும் தன்னவளை அணைத்து குழப்பிட வேண்டாம் என்றும் அந்த குடும்பத்திடம் தான் தான் அன்று இரவு சுடருடன் இருந்தது என்பதை காட்டி கொடுக்க கூடாது என்றும் அவர்கள் சுடரை கடத்திய விஷயத்தை தெரிந்துக் கொள்ளவும் தனது எண்ணங்களையும் ஆசையையும் மறைத்துக் கொண்டான்.

உயிரே என்னுயிரேWhere stories live. Discover now